உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிநடைச்சிந்து

இலக்கிய வகை அகராதி

367

இரண்டடிகளாய் ஓரதுெகையுடையதாய், ஒவ்வோர் அடியும் மூன்று சீர்களும் தனிச்சொல்லும், பின்னும் நான்கு சீர்களும் உடையதாய் அமைந்துள்ள சிந்து நடையில் வருவது வழிநடைச்சிந்து ஆகும்.

அடியார் கூட்டம் தம் ஊரில் இருந்து தாம்வழிபட விரும்பும் இறைவன் திருக்கோயில் கொண்டுள்ள இடம் வரைக்கும் உள்ள வழிகளையும், வனப்புகளையும், ஊர்களையும், உயர்வுகளையும், சிந்துப்பா நடையில் கூறுவது வழிநடைச்சிந்தாம்.

வழிநடைச் செலவு வகையில் முற்பட இருந்ததாகக் கூறப் படும் நூல் 'செங்கோன் தரைச்செலவு'; அந்நூலையடுத்துப் பாடப்பட்டதாகக் கிடைத்துள்ள ஒரு சிதைவு நூல் ‘தகடூர்’ யாத்திரை.'

திருப்பரங்கிரி வழிநடைச்சிந்து என்னும் நூல் ஓடாத்தூர் என்னும் ஊரில் இருந்து திருப்பரங்குன்றம் வரைக்கும் வந்து மீண்டும் ஓடாத்தூர் செல்லுதலைக் குறிப்பது. ஒரு தலைவன் தன் தலைவியை விளித்துக் கூறிக்கொண்டு போவதாகப் பல் வேறு சந்தநடையில் நடக்கின்றது. அதனைப் பாடியவர் ஓடாத் தூர் இராமசாமிப் புலவர் என்பார்.

சில வழிநடைச் சிந்துகள் வழிநடைக் காவடிச்சிந்து எனவும் படுதல் உண்டு.

காவடிச்சிந்தும் வழிநடைச்சிந்தும் பொருளாலும் போக் காலும் ‘இரட்டைப்பிறவி' எனலாம்.

வழிமொழித் திருவிராகம்

இராகம்

-

இசை.

ப்பெயரால் திருப்பிரமபுரப் பதிகமொன்று தேவாரத் தில் உள்ளது. இது யாப்பியலால் பெற்ற பெயர் என்பது வெளிப்படுகின்றது.

66

சுரருலகு நரர்கள்பயில் தரணிதலம் முரணிழிய அரணமதில்முப்

புரமெரிய விரவுவகை சரவிசைகொள் கரமுடைய பரமனிடமாம்