இலக்கிய வகை அகராதி
373
‘சந்திரோபாலம்பனம்’, ‘மன்மதோபாலம் பனம்' என நூல்களில் இடம் பெற்றுள. இராமகாதையில் இவ்வண்ணனை மிகப் பெருக்கமாக உள்ளது. இத்தகைய பாவிகக் காட்சியை வாங்கிக் கொண்டு எழுந்த சிறுநூல், ‘விடயசந்திரோதயம்' ஆகும்.
"நாட்டுமயல், வெண்ணிலவிற் கூறல் விடயசந்திரோதய
மாம், எண்ணுங்கலித்தாழிசை' என்பது பிரபந்தத்திரட்டு விடுகவி
(46).
'விடுகதை' உரைநடை வழிப்பட்டது. ‘விடுகவி' பாடல் வழிப்பட்டது.
ஆசிரியர் தொல்காப்பியர் எழுவகை யாப்புகளைக் குறிக் குங்கால் (செய். 78) “நொடியொடு புணர்ந்த பிசி" என்ப தொன்றனைச் சுட்டுகின்றார். "பிசியாவது உவமையை அடிப் படையாகக்கொண்டு தோன்றும் விடுகதைப் பாட்டு வகை'
என்பர்.
பிசி இருவகைப்பட்டு இயலுதலை,
66
ஒப்பொடு புணர்ந்த உவமத்தானும்
தோன்றுவது கிளந்த துணிவினாலும்
என்றிரு வகைத்தே பிசிவகை நிலையே.'
99
எனத் தெளிவிப்பார் ஆசிரியர் (தொல். செய். 176) இதற்கு,
و,
“பிறைகவ்வி மலை நடக்கும்” என்பது ஒப்பொடு புணர்ந்த உவமம்; இஃது யானையென்றாவது.
“முத்துப்போற் பூத்து முதிரிற் களாவண்ண
நெய்த்தோர் குருதி நிறங்கொண்டு - வித்துதிர்த்து.”
என்பதும் அது. இது கமுகின் மேற்று.
66
நீராடான் பார்ப்பான் நிறஞ்செய்யான் நீராடில் ஊராடு நீரிற்காக் கை.
என்பது தோன்றுவது கிளந்த துணிவினான் வந்தது. இது "நெருப்பென்றாவது” என்பார் பேராசிரியர்.