376
2
இளங்குமரனார் தமிழ் வளம் – 2
நகர்விருத்தத்தை ஊர்விருத்தம் என்பார் முத்துவீரியனார்.
66
“ வில்வா ளொடுவேல் செங்கோல் யானை
குதிரை நாடூர் குடையிவ் வொன்பதும்
பப்பத் தகவல் விருத்தத் தாலே
ஒன்பது வகையுற உரைப்பது விருத்த
இலக்கணம் என்மனார் இயல்புணர்ந் தோரே."
(முத்துவீரியம், 1126)
இவ்விருத்தங்களை அவ்வப் பெயர்களில் காண்க.)
வில்லுப்பாட்டு
வில்லடி - வில்லடிப்பாட்டு என்பதும் இது.
வில்-படைக்கருவியாகப் பழமை தொட்டே வழங்கி யுள்ளது. அதன் அமைப்பில் 'வில்யாழ்' என்னும் இசைக் கருவியும் இருந்துளது. ‘வில்பூட்டு’ அல்லது ‘பூட்டுவில் பொருள் கோள்' என இலக்கண ஆட்சியும் பெற்றுளது. ‘வல்வில் ஓரி' என்பவன் வில்லாண்மை தனிச்சிறப்புடையதாம். வில்லின் தோற்றம் வானவில்லை நினைவுகூரச் செய்துளது. அது ‘திரு வில்' எனக் குறிக்கப்படும் சிறப்புடையதாயிற்று.
வில்லடிப்பாட்டு சிந்துவகைப்பாடலால் இயலும்; இரு சீரடி இரண்டு இரண்டாய் இணையும்; அடிகள் மோனைத் தொடையில் இயலும்; பொருளுக்கு ஏற்ற சந்தத்தோடும் அமையும்; முன்பாட்டு, பின்பாட்டு, வில்லடி, குடமடி எல்லாம் இணைந்து சதங்கை ஒலியோடு வெளிப்படுங்கால் கேட்பவரை வயப்படுத்துதல் கண்கூடு.
பழங்கதை, சமுதாயக் (குமுகாயக்) கதை இவற்றைப் பற்றிய வில்லடிப்பாடல்கள் பாடப்படுகின்றன. சிலப்பதிகாரம், இராமாயணம் முதலிய காவியச் செய்திகளும், நல்லதங்காள் கதை, கட்டபொம்மன் கதை முதலியனவும் கல்லா மக்களுக்கும் களிப்பூட்டுவனவாய் வில்லடிப் பாடலாய் அமைகின்றன. டையிடையே வரும் உரை நடைச்செய்தி கதையைச் சுருக்கவும் பெருக்கவும், துணையாகின்றது. சாத்தூர் பிச்சைக்குட்டியின் வில்லுப்பாட்டு அண்மைக் காலத்தே சிறப்புடன் விளங்கிற்று.