அறிஞர் இளங்குமரன் அவர்கள் இலக்கணப்புலவர். இலக்கியச் செல்வர். தமிழ் மரபு காக்கும் மரபினர். நுழைபுலம் மிக்க ஆய்வாளர். கற்றது விரித்துரைக்க வல்ல பேராசிரியர். கற்றபடி நிற்கும் சான்றோர். குறள்கூறும் செந்நெறியில் ஒழுகும் செம்மல். பீடு நடையினர். பெருமித வாழ்வினர். தமிழ்ப் பணியையே தலையாய பணியாகக் கொண்டு வாழும் திருமகனார். மொழிஞாயிறு பாவாணர் வழியில் வேர்ச்சொல் ஆராயும் வித்தகர். தமிழ்க்கல்வி இயக்கம் கண்ட தலைமைசால் பேராசிரியர். செம்மல் வ.சுப.மாணிக்கனார் வழியில் சொல்லாக்கம் செய்பவர். பேச்சால் எழுத்தால் வாழ்வில் இளைஞர்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்கு. அவர்கள் எழுதிய இலக்கியவகை அகராதி சிற்றிலக்கிய வரலாற்று ஆராய்ச்சிக்குக் கிடைத்த கருவூலம்; கருத்துக் களஞ்சியம்.”
பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பன்
2,சிங்காரவேலர் தெரு தியாகராயர் நகர்
வளவன் பதிப்பகம், சென்னை - 600 017