இணைச்சொல் அகராதி
எச்சவன் இளைச்சவன் (எய்த்தவன், இளைத்தவன்):
எய்த்தவன்
இளைத்தவன்
நலிந்துபோனவன்
களைத்துப் போனவன்
35
இனி, எய்த்தவன் உடல் நலிவுக்கு ஆட்பட்டவனும், இளைத்தவன் பிறர் இளக்காரப்படுத்துதற்கு ஆட்பட்டவனுமாம். “எய்த்தவன் இளைத்தவன்!என்றால் ஏறிக்கொண்டா மிதிப்பது?” ‘என்பது நல்லவன் வினா!
சடுகுடுஆட்டத்தில்மூச்சுவிட்டுவிட்டால்‘எச்சுப்போனான்’
என்பர். முற்றுப் பெறாச் சொல் எச்சம்' என்பது இலக்கணம். எச்சிற்கை ஈரக்கை
எச்சிற்கை உண்டபின், கழுவாத கை.
ஈரக்கை - உண்டு கழுவியபின், ஈரத்தைத் துடையாத அல்லது உலராத கை.
'எச்சிற்கையோ ஈரக்கையோ உதறமாட்டான். எனக் கருமி களைப் பழித்துரைப்பர். எச்சிற்கையை உதறினால், அதில் ஒட்டியுள்ள ஒன்றிரண்டு பொறுக்குகள் உதிர்ந்துபோம் என்றும், ஈரக்கையை உதறினால் அதில் படிந்துள்ள நீர்த்துளி வீழ்ந்துவிடும் என்றும் எண்ணிக் கையை உதறமாட்டானாம்! இத்தகையவனை ‘எருமைத் தோலைக் கொண்டு வடிகட்டினால் ஏதாவது வழியுமா? நெய்யரி, சல்லடை, பன்னாடையைக் கொண்டு வடிக்கட்டினால் வழியும், எருமைத் தோலைக் கொண்டு வடி கட்டினால்? எட்டுக்கும் எழுவுக்கும்: (இழவுக்கும்)
எட்டு இழவு
―
வ
இறந்தார்க்கு, எட்டாம் நாள் செய்யும் கடன்.
இறந்தோர்க்குப் பதினாறாம் நாள் செய்யும் கடன்.
“எட்டுக்கும் சேர்வான்; இழவுக்கும் சேர்வான்" என்பது பழமொழி. எட்டா நாள் கடன் செய்வார் தாய் வழியார்; பதினாறாம் நாள் கடன் செய்வார் மாமன் வழியார்; ரண்டற்கும் கூடுவார் என்பது முறைபிசகைச் சுட்டுவதாம். கூடத்தகாத இடத்துக்கு கூடும் இயல்பினரை இவ்வாறு சுட்டுவது வழக்கு. தனக்கென்று எவ்வொரு திட்டமும் கொள்கையும் ல்லாமல் எங்கேயும் சேர்ந்து எப்படியும் வாழ்வாரை இழித்துரைப்பதற்கு இப்பழமொழியை ஆள்வர்.