உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மற்றொன்று

இணைச்சொல் அகராதி

முட்டும்போது தானே

39

போட்டி

தொடங்குகின்றது. போட்டியில் நல்ல போட்டியும் அல்ல போட்டியும் உண்டு. ஏட்டிக்குப் போட்டி உள்ளச் சிறுமையால் ஏற்பாடுவதாம்.

போட்டிக்கு முடிவு உண்டோ? 'போட்டா போட்டி' யாகி ஒன்றன் அழிவும், ஒன்றன் ஆக்கம் போன்ற அழிவும் கூடி ரண்டும் அழிந்து படவேயாகும்.

ஏணும் கோணும்:

ஏண்

கோண்

உயரம்

வளைவு அல்லது கோணல்.

ஏண் உயர்வுப் பொருள் தருதல் ஏணியை எண்ணிக் காண்க. ஏண் உயரமாதல் 'சேண்' என்பதிலும் அறிக. உயர்ந்த தோளை ஏணுலாவிய தோள்' என்றார் கம்பர்.

கோணல் வளைவாதல், கோணுதல், கூன், கூனி, கூனை, குனிவு முதலியவற்றில் கண்டு கொள்க. கோணற்கால், கோணல் நடை, கோணன் என்னும் ஆட்சிகளில் கோணல் தெளிவாம். ஏமம் சாமம்:

ஏமம்

சாமம்

– போர்க் களத்தில் அல்லது பகையின் பாதுகாப்பாம் துணை.

நள்ளிருளில் அல்லது அச்சத்தில் உடனாம் துணை.

ஏமாம்-பாதுகாப்பு; ‘ஏமப்புணை' என்பது பாதுகாப்பாம் மிதப்பு. கடலில் செல்வார் கலம் கவிழநேரின் ஏமப்புணை கொண்டு உய்வர். 'ஏமாஞ்சாராச் சிறியவர்' என்று சொல்வார் வள்ளுவர். ஏமம் அரண்பொருள் தருதல் உண்டு (திருக்.815).

‘யாமம்' என்பது சாமம் ஆயிற்று. ‘அஞ்சாமல் தனி வழியே போக வேண்டா' என்பது ஔவையார் மொழி. ஆனால் பாதுகாப்பில்லாத நண்பரொடு செல்லுதலினும் தனிமையில் போதல் சீரியது என்பது வள்ளுவம். (814)

‘ஏமம் சாமம் பாராமல் உதவிக்கு நிற்பான்' என்பதொரு பாராட்டுரை.