42
2
இளங்குமரனார் தமிழ் வளம் – 2
உண்டு. குறிப்பாக எண் தொடர்பான செய்திகளிலேயே ஏறக்குறைய முதலியன பெரிதும் வழங்கப்படும். 'ஏறக்குறைய ஈராயிர உரூபா செலவாகும்' என்பது போலவரும். ‘ஏறக்குறைய முடிந்த நிலை தான்'என்பது போல அருகி வழங்கும். குறையக் காண்க.
ஏறு மாறு :
ஏறு
மாறு
ஏறுதல் அல்லது எக்காரம் அமைதல்.
மாறுதல் அல்லது தாழ்ச்சி அமைதல்.
கூடக்
ஏறுக்குமாறு என்றால் முரண்படுதலாம். ஏறும் போது மாறுதல் - இறங்குதல்; இறங்கும் போது மாறுதல் ஏறுதல்; இவை ஏறுக்குமாறு எனப்படும். “ஏறுமாறாக நடப்பாளே யாமாகில் கூறாமல் சந்நியாசம் கொள்.” என்பது ஔவையார் தனிப்பாடல்.
ஏறுக்கு மாறு எவருக்கும் பயனாகாதது. மெய்யாக, இணை வாழ்வுக்கு ஆகுமா? ஏறுமாறு ஏற்ற மாற்றமுமாம்.
ஏனோ தானோ:
ஏனோ
தானோ
-
என்னுடையதோ
தன்னுடையதோ; அதாவது அவனுடையதோ.
ஒரு செயலைச் செய்வான் தன்னுடையது எனின் மிகமிக அக்கறையுடனும் ஆர்வத்துடனும் செய்வான். அத்தகையவன் பிறனுடையதெனின் ஆர்வமும் கொள்ளான், அக்கறையும் காட்டான். இவனோ என்னுடையது என்று அக்கறைக்காட்டிச் செய்வானும் அல்லன்; அவனுடையது என்று று அறவே புறக்கணிப்பானும் அல்லன். இரண்டும் கெட்டனாய்ப் பட்டும் படாமல்' செய்கிறான் என்பதாம்.
என் என்பது ‘ஏன்’ என நீண்டது. 'ஏன் பொருள்' ஏன் எண்ணம்' என நீள்வதுபேச்சு வழக்கில் உள்ளனவே. தான் என்பது படர்க்கைப் பெயர்.
ஒட்டு உறவு:
ஒட்டு
குருதிக் கலப்பு நெருக்கம் உடையவர் ஒட்டு. அவரவர் உற்றார்.