44
மண்ணடி
இளங்குமரனார் தமிழ் வளம் – 2 2
மண்
அடி என்பது அடியைக் குறிக்காமல் சார்ந்த இடத்தைக் குறித்து வந்தது. ‘இரயிலடி’ ‘தேரடி’ ‘செக்கடி’ என்பவனற்றை அறிக.
எந்த ஒன்றுக்கும் மண்ணுக்கும் உள்ள சார்பு மிக அழுத்த மானது. விட்டுப் பிரியாத, விட்டுவிட இயலாத சார்பு; ஒருகால் விட்டு விலகினும் எதிர்ப்பாற்றலால் நேர்வது அது. பின்னே ஒரு கால் அவ்வெதிர்ப்பாற்றல் விலகியதும் பற்றி நிற்கும் ஈர்ப்பு அதற்கு உண்டு. உண்டு. இணைந்திருக்கும் உறவுகளை ஒண்ணடி மண்ணடி என்பர். “எப்படி ஒண்ணடி மண்ணடியாக இருந்தார்கள்;இப்படிச் சண்டை போடுகிறார்களே" என்பர். வேறுபாடன்மை சுட்டுவது ஒண்ணடி மண்ணடியாம். ஒண்ணும் மண்ணும் என்பதும் இது
ஒற்றை சற்றை : (ஒத்த சத்த)
ஒற்றை
சற்றை
தனிமை
கயமை அல்லது கீழ்மை
“ஒற்றை சற்றையாய்ப் போகாதே”, “ஒற்றை சற்றையில் போகாதே” என்பன போல ‘ஒற்றை சற்றை’ வழக்கில் உள்ளது.
தனித்துப் போதல் ஒற்றையாம்; தகுதி இல்லாதவர் துணையுடன் போதல் சற்றையாம்.
கூடார் கூட்டைப் பார்க்கிலும் தனிமையே நல்லது என்பது கண்கூடு. ஒற்றையில் செல்வதையும், தீயவர் துணையுடன் செல்வதையும் விலக்க வந்தது இவ்விணைமொழி.
ஒன்றுக்குள்ளே ஒன்று: (ஒண்ணுக்குள்ளே ஒண்ணு)
ஒன்று
ஒரு பெரும் பிரிவு
உள்ளே ஒன்று - பெரும் பிரிவினுள் ஒருசிறு பிரிவு
ஓரினத்திற்குள்ளோ, ஒரு குடிவழியினுள்ளோ பகை, பிளவு, உரசல் முரசல், ஏற்பட்டால், “ஒண்ணுக்குள்ளே ஒண்ணு; பொறுத்துப் போக வேண்டாமா?” என்பர். ‘அவன் யார்? நீயார்?' என்று எண்ணிப் பார்க்க வேண்டாமா?" என்றும் கூறுவர்.இனத்துள் அல்லது குடும்பத்துள் பிளவு கூடாது