உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண் காது:

கண்

காது

இணைச்சொல் அகராதி

- கண்ணால் கண்டது போல ஒன்றைக் கூறுதல்.

காதால் கேட்டது போல ஒன்றைக் கூறுதல்.

51

கண்ணும் காதும் வைத்துப் பேசுவான் என்பதில் இக்குறிப்புண்மை அறியலாம்.

காணாததையும், கேளாததையும் கண்டது போலவும் கேட்டது போலவும் இட்டுக் கட்டிக் கூறுதல் சிலர்க்கு இயல்பு. அத்தகையரைக் “கண் காது வைக்காமல் உன்னால் பேச முடியாதே' என்பர்.

கண்ணும் காதும் அருகிலிருந்தும் காதினைக் கண் பாராது. கண்ட துண்டம்

கண்டம்

துண்டம்

கண்டிக்கப் பெற்றது கண்டம்.

கண்டத்தைத் துண்டிக்கப் பெற்றது துண்டாம்.

கண்டம் பெரியது; துண்டம் கண்டத்தில் சிறியது என்க.

கண்ட கோடரி என்பது கோடரியுள் ஒன்று. மரம் வெட்டுவார் கண்டி வைத்து வெட்டுதல் கண்கூடு. உப்புக் கண்டமும், நிலப்பிரிவாம் கண்டமும் அறிந்தவையாம்.

துண்டம்-துண்டிக்கப்பட்டது

எனினும் இவண் கண்டித்ததைத் துண்டித்தது என்க. துண்டு, அறுவை, வேட்டி முதலியவற்றைக் கருதினால் பாவில் இருந்து அறுத் தெடுக்கப்படுதலால் பெற்ற பெயர்கள் என்பது புலனாம்.

கண்ட துண்டத்தைத் 'துண்ட துண்டம்’ என்பார் அருணகிரியார்.

கண்டது கழியது

கண்டது

கழியது

கண்ணில் கண்ட பொருள்களும் கையிற்குக் கிடைத்த

பொருள்களுமாம்.

உடலுக்கு ஒவ்வாத பொருள்களும் பதனழிந்து போன பொருள்களுமாம்.