இணைச்சொல் அகராதி
63
எட்டத்தில் என்பது. கிட்டப்பார்வை, எட்டப்பார்வை என்பவை முரண்பார்வைகளே. குழிவு குவிவு காண்க.
கிட்ட முட்ட
கிட்ட
முட்ட
கிட்டத்தில் அல்லது நெருக்கத்தில்
கண்ணுக்குப் படுமாறோ காதுக்குப் படுமாறோ உள்ள தொலைவில்.
'போனவன் கிட்ட முட்டத் தெரியவில்லை' ‘வண்டி கிட்ட முட்டத் தெரியவில்லை'-இன்னவாறு ‘கிட்ட முட்ட’ வழங்கப் படுகின்றது.
கிட்டுதல்-நெருங்குதல், ‘கிட்டத்து வீட்டுக்காரர் எட்டத்து வீட்டுக்காரர் என்பவை சொல்லப்படுபவை. 'கிட்டிபோட்டு இறுக்குதல்' என்பதும் வழக்கு.
முட்ட என்பது ஒலி, ஒளி முதலியவை முட்ட என்பதாம். “கிட்டத்துறவு முட்டப் பகை என்பது இணைச் சொல்லையும் விளக்கும் பழமொழி.
கிண்டலும் கேலியும்
கிண்டல்
கேலி
ஒருவன் மறைவுச் செய்தியை அவன் வாயில் இருந்தே பிடுங்குதல்; கிண்டி அறிதல் கிண்டல் ஆயிற்று.
நகையாடுதல் கேலியாம்.
கிண்டியறிந்து கொண்ட செய்தியைக் கொண்டு நகை யாடுதல் கிண்டலும் கேலியுமாம். "என்னைப் பார்த்தால் உனக்குக் கிண்டலும் கேலியுமாக இருக்கிறது” என்று
கிண்டலும்
இயலாதார் தம்மை நொந்து கொள்ளுதல் கண்கூடு.
கிண்டுதல் கிளறுதல்
கிண்டுதல் கோழி காலால் நிலத்தைக் கிழித்தல்.
கிளறுதல் கிண்டிய இடத்தில் கோழி அலகால் சீத்தல்.
“கோழி கிண்டிக் கிளறித் தொலைக்கிறது” என்பது வழக்கு. கிண்டிக் கிளைத்தல் என்பதும் இதுவே. "குப்பையில் கிண்டி கிளைக்கும்” என்பது பழமொழி.
ஒருவர் செய்தியைத் துருவித் துருவிக் கேட்கும் போது,