உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப்பாடல் கனிச்சுவை

113

11. பெரியர்

ஒரு நல்ல செயலைச் செய்யவேண்டும் என்று பிறர் சொல்லாமல் தாமே உணர்ந்து செய்பவர் பெரியவர்; அதனைச் செய்ய வேண்டும் என்று பிறர் கேட்டுக் கொண்ட போதில் ஆயினும், செய்பவர் அப்பெரியவர் அல்லர். எனினும் அவரிற் சிறியவர் ஆவர். அவ்வாறு சொல்லியும் செய்யாதவர் இழிமை யானவர் என்பது ஒளவையார் கூறிய கருத்து. அதனைத் தக்க உவமையால் கூற விரும்பிப் “பலாமாவைப் பாதிரியைப் பார்” என்றார்.

பலாவின் பூ வெளிப்படாமலே காய்க்கும்

மாவின் பூ வெளிப்பட்டுக் காய்க்கும்

பாதிரியின் பூ வெளிப்பட்டும் காய்த்தல் இல்லை.

பூ

தக்கதைத்தாமே உணர்ந்து செய்யும் செயலுடை யவரே பெரியவர் என்பது அவர் கூறிய நல்லுரையாம். அப்பாடல்: “சொல்லாம லேபெரியர் சொல்லிச்செய் வார்சிறியர் சொல்லியும் செய்யாற் கயவரே - நல்ல குலாமாலை வேற்கண்ணாய் கூறுவமை நாடிற் பலாமாவைப் பாதிரியைப் பார்"

கயவர் - இழிந்தவர். குலாமாலை

விளங்குகின்ற மாலை. குலாவுதல் - தழுவுதல்,

விளங்குதல். கூறு உவமை (கூறுவமை) - சொல்லும் உவமை. நாடில் - எண்ணினால். பாதிரி – பாடலம்.