உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

14.நாற்பொருள்

தமிழர் அறம் பொருள் இன்பம் என முப்பொருள் கண்டனர். ன்பம் என்பதை இவ்வுலக இன்பம், அவ் வுலக இன்பம் என இரண்டாக்கிப் பின்வந்தோர் நாற் பொருள் எனக் கண்டனர். அவற்றை அறம் பொருள் இன்பம் வீடு எனப் பெயரிட்டு வழங்கினர். ஔவை யார் இந்நான்கு பொருள்களையும் ஒரே பாடலில் சுருக்கி உரைத்தார்.

ஈகை என்னும் கொடை அறமாகும்; தீமை நேராமல் தேடுவதே பொருள்; அன்புடைய ஓராணும் பெண்ணும் ஒத்த எண்ணத்தோடு வாழும் வாழ்வே இன்பம். இறைவனை எண்ணி இம்மூன்றிலும் பற்றில் லாது வாழ்வது பேரின்பம் எனப்படும் வீடாகும். இவற்றை,

“ஈதல் அறம்; தீவினைவிட் டீட்டல்பொருள்; எஞ்ஞான்றும் காதல் இருவர் கருத்தொருமித்து - ஆதரவு பட்டதே இன்பம்; பரனை நினைந் திம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு”

என்று கூறினார்

ஈதல் - கொடுத்தல். ஈட்டல் - தேடுதல். ஆதரவு - அன்பு, அரவணைப்பு. எஞ்ஞான்றும்

– எப்போதும். பரன் - இறைவன்.