உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

இளங்குமரனார் தமிழ் வளம் - 20

22. காட்சி

ஒன்றை மதிப்பிடுதல், ஒவ்வொருவர் அறிவுத் திறம் ஆற்றல் என்பவற்றுக்குத் தக அமையும்.

அஞ்சி நடுங்கும்

கோழையின்

நாம் வீரன் என்று தடிவைத்திருப்பவரையும், வாள் வேல் துமுக்கி(துப்பாக்கி)வைத்திருப்பவரையும் மதிப்பிடுகிறோம். கருவி வி அவை என்று சொல்பவர்களும் உளர். ஒளவையார் காட்சி, வீரம், கல்வி, உணவு என்பவை எவை என்பதை ஒரு பாடலாகக் கூறுகிறார்.

ஐம்புலனையும் ஒன்றாக்கிக் காணும் அறிவே காட்சி எனப்படும். ஐம்புலனையும் வெற்றி கொண்டவன் வீரமே வீரமாகும்; கற்ற எதனையும் மறவாமல் பாதுகாக்கும் திறமே கல்வியாகும்; பிறர் கையையோ ஆணையையோ எதிர்பார்த்திராமல் தான் விரும்பும் போது தன் உழைப்பால் வந்த உணவை உண்பதே உணவு ஆகும். அப்பாடல்:

ஒன்றாகக் காண்பதே காட்சி; புலனைந்தும் வென்றான்தன் வீரமே வீரமாம் - ஒன்றானும் சாவாமல் கற்பதே கல்வி; தனைப்பிறர் ஏவாமல் உண்பதே ஊண்.

காட்சி – பார்வை, அறிவு. புலன் ஐந்து - கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறிதல்.

சாவாமல் - அழியாமல். ஏவாமல் - கட்டளை இடாமல்.