உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

வள்ளுவர் பா. அடி வகையில் குறுகியது ஒளவையார் ஆத்தி சூடிப்பா.

வள்ளுவர், பாவில் கூறும் செய்தியைப் பொது மக்கள் மரபுச் சொல்லாகவும், பழமொழியாகவும் வழங்குதலை எண்ணிப் பார்ப்பது இக் கட்டுரை. வள்ளுவரைக் கொண்டு செய்தார்களா, அவர் பாடலைக் கருதாமலே தம் போக்கில் அமைத்துக் கொண்டார்களா என்பதை எண்ணாமல், இரண்டும் ஒத்து இயல்வதையும், எளிமையும் அழகும் தெளி வும் சுருக்கமும் கொண்டு இயல்வதையும் எண்ணின் வியப்பு மிக்கதாம்.

இத்தொகை நூல் முத்தொகை கொண்டது. ஒன்று, வள்ளுவத் தொகை; இரண்டு, பொது மக்கள் வாக்குத் தொகை; மூன்று, ஒப்புக் கண்டு உரைக்கும் ஒப்பாய்வுத் தொகை. இம்முத்தொகையும் ஒருங்கே கிடைக்கும் வகையை வழங்கிய தோன்றல் எவர்? தமிழ்மண்ணின் வளமாக நூல் வெளியிடும் வளவன் பதிப்பக நிறுவனர் தோன்றல் கோ. இளவழகன் அவர்தம் நல்லார்வமும் நல்லெண்ணமும் நன்றிக் குரியவை.

அன்புடன்,

இரா.இளங்குமரன்