உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளர்த்த தாமோதரனார்

153

திராவிடம் என்னும் வடமொழியே தமிழ் என்று ஆகியது என்று சற்றும் ஆய்வின்றிக் கூறுவாரும் உளர். அவர் மதம் சாலவும் நன்றாயிருந்தது! தமிழிலே தமிழ் என்னும் சொல் வருமுன்னர் வடமொழியில் திராவிடம் என்னும் சொல் உளதாகில் அப்பெயர் எப்பொருளை உணர்த்திற்றோ! உலகத்தில் எக்காலத்தும் பெயரா பொருளா முந்தியது? பொருளெனில் அப்பொருள் இருக்கும் இடத்தா, அஃது இல்லாத பிறிது தேயத்திலா அதன் பெயர் முன்னர் நிகழும்? இஃது உணராது தமிழ் வழங்கிய இடத்தில் தமிழுக்கோர் பெயர் இருந்ததில்லை என்றும், வடமொழியில் இருந்து அதற்குப் பெயர் வந்த தென்றும் சொல்வது யார்க்கும் நகை விளைக்குமே என்று மறுக்கிறார்.

யாதொரு தமிழ்ச் சொல்லில் இரண்டோரெழுத்து வடமொழிக்கு ஒப்ப நிகழுமாயின் அது வடமொழியினின்று பிறந்ததெனச் சாதிக்கின்றனர். மேலை நாட்டு மக்களின் ஆங்கிலம் முதலிய அயல் மொழிகளில் இன்றியமையா வீட்டுச் சொற்களாகித் தந்தை தாயரைக் குறிக்கும் 'பாதர்' 'மதர்' என்பன முதலியன வடமொழி அடியாய்ப் பிறந்தன என்பரா? அப்படியாயின் வடமொழியைக் காணாமுன் அந்நாட்டின் ரெல்லாம் தாய் தந்தையரை அழைத்தற்கோர் வீட்டுச் சொல் ல்லாதிருந்தனர் என்றன்றோமுடியும்! ஆண்டுள்ள பாதர் மதர் ஒப்ப ஈண்டும் பிதா மாதா ஆயிற்றெனில் யாது குற்றம்? தருக்கத்தில் காக்கையேறப் பனம்பழம் விழுந்தது என்னும் முறையின் உண்மை அறியாமலும் ஆரிய மொழிக்கும் அதன் அயல் நாட்டு மொழிகளுக்கும் உள்ள சம்பந்த சார்புகளின் காரணத்தை ஆராயாமலும் இவ்வாறு கழறும் இவர் கற்பனைக்கு யாது செய்யலாம்? இவர் வாய்க்கு விலங்கிட யாரால் முடியும்? என்று வினாக்கள் பலப்பல அடுக்கி விளக்குகிறார்.

தமிழ் என்னும் தென்மொழிச் சொல்லே வட மொழியில் திராவிடம் என மரீஇயது என்று கூறும் ஒரு சாராரையும் "இவரும் உண்மை கண்டவர் அல்லர்: என்று மறுத்து, இரு கூற்றாரும் திராவிடம் என்னும் சொல் வந்த வரலாறும் அதன் பொருளும் வழக்கியலும் அறியாராயினார் எனத் தள்ளுகிறார்.

திராவிடம் என்னும் சொல் திரா என்னும் அடியாற் பிறந்து ஓடிவளைந்தது என்னும் பொருளுடையது. இது மகாநதி முதல் குமரியீறாக ஓடிவளைந்த கோடி மண்டலத்தை உணர்த்துவது என்கிறார். பஞ்சத் திராவிடம் என்பதால் தமிழ் தெலுங்கு கன்னடம் மராட்டிரம் கூர்ச்சரம் என்னும் ஐந்து மொழிகளையும்