உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மலை

95

ஸ்ரீமான் சொக்கநாதரவர்களிடமிருந்து கடிதம் வந்தது. அதில் அவர் எனது வருகைக்காகத் தாம் மிக மகிழ்வதாகவும், என்னை அங்கேற்று அளவளாவ மிக்க விருப்பம் வைத்திருப்பதாகவும் தெரிவித்தனர். ஆனால் இச் சமயம் தம்மால் குறிப்பிட்ட தர்மத்திற்குப் பொருள் திரட்டித்தர யலாமைபற்றி வருந்துகிறதாகவும் வருந்துகிறதாகவும் எழுதி யிருக்கிறார். இவர்கள் போன்ற முதியவர் சொற்களினால் இளைஞர் களான நம் முயற்சி தளரா வண்ணம் அருட்கடலான நம் ஆண்டவன் துணைபுரிவானாக.

நல்லறிவினும் நற்குணத்தினும் சிறந்த நம் ஆப்தர் ஸ்ரீமான் தாமோதரம் பிள்ளையவர்கள் தங்கள் பெருந்துணையாயிருப்பார்களெனத்

வித்துவான், முயற்சிக்கு ஒரு

திருவருளைச் சிந்திக்கின்றேன்.

இங்கே இடையறாது உபந்நியாசங்கள் செய்துவந்த மையால் மூளையிற் கொதிப்பேற, அச் சமயத்தினும் வாதுமைத் தைலம் தேய்த்து முழுகினதால், கடும் தோஷம் பிடித்து வருத்தியது; இப்போது சுகம். இன்று ஓர் உபந்நியாசம் இங்கே செய்ய வேண்டியிருக்கின்றது. அது முடிந்ததும் ஐந்தாறு நாளில் கொழும்புக்கு செல்ல வேண்டு மென்று கருதுகின்றேன். எல்லாம் வல்ல இறைவனை நாம் எடுத்தகாரியங்கள் இனிது நிறைவேறும். சுகத்தை விரும்பித் திருவருளை வழுத்தும்,

அன்புள்ள

சுவாமிவேலு