உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. சமய ஆராய்ச்சித் திறன்

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

அடிகளார் ஆராய்ச்சி நூல்களில் மிக விரிவானது இந்நூல்.இந்நூல் சமய ஆய்வா மணிவாசகர் வரலாற்று ஆய்வா, அவர்தம்கால ஆய்வா, தமிழ் இலக்கிய ஆய்வா, சமயச்சீர்திருத்த ஆய்வா, தமிழக வரலாற்றாய்வா எனின் எல்லாம்தகும் என்னுமாறு அமைந்தது. மணிவாசகர், சமய நால்வருள் ஒருவர்என்பது எவர்க்கும் ஒப்ப முடிந்த முடிவு ஆகலான், 'சமய ஆய்வு' எனத் தலைப்புத் தரப்பட்ட தாம்.

,

ஞான சாகர முதற்பதுமத்தில் 'மாணிக்கவாசகர் காலநிருணயம்' என்றொரு கட்டுரையை அடிகளார் எழுதினார் (1903) அதன்பின் அக்கட்டுரையை மறுத்து எழுதியவர்களின் கருத்துகளை ஆராய்ந்து அவற்றை மறுத்து 1908 ஆம் ஆண்டில் 'மாணிக்கவாசகர் காலம்' என்னும் பெயரில் ஞானசாகர நான்காம் பதுமத்தில் எழுதினார்.

அதன்பின் இருபது ஆண்டுகளாய்ப் பொதுவாகத் தமிழ்நூல்களின் கால அளவை பற்றியும், மாணிக்கவாசகர் கால வரையறைப் பற்றியும் அறிஞர்கள் பலராலும் எழுதி வெளியிடப் பட்ட கட்டுரைகளையும் நூல்களையும் ஆராய்ந்தார். தொல்காப்பியம் முதல் சிவஞானபோதம் இறுதியாக வந்த தென்னூல்வடநூல்களின் காலங்களை யெல்லாம் வரையறை செய்து நிறுவி, அம்முகத்தால் மாணிக்கவாசகர் காலம் சைவ சமய சமயாசிரியர் மூவர் காலத்திற்கும் முற்பட்டது என்றும் அது கி.பி. மூன்றாம் நூற்றாண்டு என்றும் கண்டார். அதனை விரித்தெழுதி நூலாக வெளியிட்டார்.

மாணிக்கவாகர் வரலாறும் காலமும் ஆங்கில முகவுரை, தமிழ் முகவுரை என்னும் இருபாற் பகுதிகளையும் தனியே 48 பக்க அளவில் கொண்டுள்ளது. (24+24) பொருளடக்கம் மிக விரிந்த வகையால் பொருள் அனைத்தையும் அடைவுறக் காணுமாறு 76 பக்கங்களில் இயல்கின்றது.