உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்ன

இல்லறமே அறம் :

197

இல்வாழ்க்கை ஒன்றுமே அறனென வைத்துச் சொல்லப் படுவதற்கு உரித்தாவதன்றித் துறவு வாழ்க்கை அறம் எனப்படுதற்கு உரிமை உடைத்தன்று என்பது அடிகளார் கொள்கை (ஷ51) அக்கருத்தொடு துறவு மடங்களைப் பற்றித் தெளிந்துரைக்கிறார்.

மண வாழ்க்கையில் இருந்தக்கால் தாம் செய்து போந்த முப்பத்திரண்டு அறங்களையும் தம் உரிமைச் சுற்றத்தார் செய்து போதருமாறு ஒருங்கு செய்து உலக நன்மையையும் தமது நன்மையையும் நாடி இறைவனை உளங்குழைந்து உருகி வழுத்துவதாகிய தவநிலையைக் கணவனும் மனைவியும் ஒருங்கிருந்து செயற்பாலரென நம் பேராசிரியர் தொல் காப்பியனார் உரைத்தபடி நம்மனோர் செய்து வந்தனராயின் (நிலை இழுகி வழுகி ஒழுகும் இற்றைத் துறவு மடக்) கேட்டுக்கு இடமிராது என்கிறார் (ஷ50)

நாட்குறிப்பு கடிதம் நூல் என்பவற்றின் வழி அடிகளார் காண்ட சமய நோக்குகள் இவை எனக் கண்டோம். இனி இவற்றின் பிழிவு எனத் தக்கதாகவும் இவற்றில் கூறாதனவாம் குறிப்புகள் சில கொண்டனவாகவும் உள்ள சீர்திருத்தக் குறிப்புகள்,தீர்மானங்கள் என்னும் இரண்டனைக் காணலாம். அவ்விரண்டும் அடிகளார் சமய நோக்கின் வைப்பகங்களாக விளங்குதல் மிகவுண்மையாம்.

சீர்திருத்தக் குறிப்புகள்

1.

2.

3.

4.

எந்தச் சமயத்தாரேனும் எந்தச் சாதியாரேனும் சிவலிங்கத்தை வணங்குதற்கு விரும்பிக் கோயிலுள் வருவார்களாயின் அவர்களைத் தடை செய்யாமல் வந்து வணங்குதற்கு இடம் கொடுத்தல் வேண்டும்.

வழிபாடு முழுவதும் நடை பெறுமாறு ஒவ்வொரு கோயிலிலும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

திருவிழாக்கள் செவ்வையாக நடைபெறுமாறு செய்வ துடன் திருவிழாவின் உண்மையையும் பயனையும் எடுத்துச் சொல்லல் வேண்டும்.

பொதுப் பெண்டிர் தொண்டு, பொட்டுக்கட்டல் ஆகியவை அடியோடு விலக்கப்பட வேண்டும்.