உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15.

மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்ன

199

நாற்பதாண்டுக்கு மேற்பட்ட ஆண் மணஞ் செய்வாராயின் அவர் வயதொத்த கைம் பெண்ணையே மணஞ் செய்து கொள்ளும்படி தூண்டுதல் வேண்டும்.

இவை அடிகளார், சீர்திருத்தம் என்னும் பகுதியில் எழுதிய கொள்கை விளக்கங்களாகும்.

பொது நிலைக் கழகம் தோன்றி இருபதாண்டுகள் பணியாற்றிய பின்னே இருபதாம் ஆண்டுப் பெருவிழா ஒன்று நிகழ்ந்தது. அவ்விழாவின் நிறைவில் (12.9.1930) பொது நிலைக் கழகச் சீர்திருத்த முடிவுகள் எனப் பத்துத் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு ஆய்வும் நிகழ்த்தப்பட்டன. அத்தீர்

மானங்கள் :

1.

2.

3.

4.

5.

6.

1.

மை

மடத் தலைவர்கள் எல்லாக் குலத்தவர்க்கும் வேற்று இன்றிச் சமயக் கிரியைகள் கற்பிக்க முயற்சி செய்தல் வேண்டும்.

கோயில்களில் எல்லாக் குலத்தவர்க்கும் வேற்றுமை ன்றிச் சமயக் கிரியைகள் கற்பிக்க முயற்சி செய்தல் வேண்டும்.

பழந்தமிழ்க் குடிமக்கள் தீண்டாதோர் எல்லாரையும் தூய்மையாகத் திருக்கோயில்களிற் சென்று வழி பாடாற்றப் பொதுமக்களும் கோயில் தலைவர்களும் இடம் தரல் வேண்டும்.

கோயில்களில் பொதுமாதர் திருப்பணி செய்தல் ஆகாது.

வேண்டப்படாதனவும் பொருட் செலவு மிக்கனவும் சமய உண்மைக்கு முரண்பட்டனவும் அறிவுக்குப் பொருத்தமற்றனவுமான திருவிழாக்களையும் சடங்கு களையும் திருக்கோயில்களிலே செய்தல் முற்றும் கூடாது. தூயதும் வேண்டப்படுவதுமான சடங்கும் திருவிழாவும் குறைந்த செலவிலேயே செய்தல் வேண்டும். சாரதா சட்டத்தை உடனே செயன்முறைக்குக் கொண்டு வருதல் வேண்டும்.

கைம்பெண்மணம் முதல்நூல் முடிவுக்கு ஒத்ததே. மற்றவை முதனூல் முடிவுக்கு ஒத்தவைகள் எனினும் தாலியறுத்தல் மொட்டையடித்தல் வெள்ளைப் புடைவை யுடுத்தல் பட்டினி கிடத்தல் முதலிய வெறுக்கத்தக்க