உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

இளங்குமரனார் தமிழ் வளம்

தமிழர் மத மாநாடு :

22

தமிழர் சடங்குகள் தமிழிலேயே நடத்தப்படுதல் வேண்டும், தமிழர் கோயில் வழிபாடு தமிழிலேயே நடத்தப் படுதல் வேண்டும் என்பனவெல்லாம் அடிகளாரின் உயிர்ப்பான கொள்கைகள் ஆகும். அவ்வகைத் தொண்டில் அடிகள் ஈடுபட்டதன் சான்றாக 16-7-1939 இல் கோகலே மண்டபத்தில் நிகழ்ந்த தமிழர் திருமண மாநாட்டையும், 10-10-1940 இல் பச்சையப்பன் மண்டபத்தில் நிகழ்ந்த அனைத்து இந்தியத் தமிழர் மத மாநாட்டையும் சுட்டலாம். இரண்டு மாநாடு களிலும் அடிகள் தலைமையேற்க,

தமிழ்க்

காசு

வரவேற்புரைத்தார். இரு மாநாடுகளிலும் நாவலர் பாரதியாரும் கலந்து கொண்டார். மேலும் உமாமகேசுவரர், முன்னாள் அமைச்சர் முத்தையா, செட்டிநாட்டு அரசர் முத்தையா ஆகியோரும் கலந்து கொண்டனர். அடிகளார் எழுதிய நூல்களில் ஒன்று 'தமிழர் மதம்' என்பதாகும்.

வள்ளுவராண்டு :

அடிகளார் ஆக்கச் செயல்களுள் ஒன்று திருவள்ளுவர் ஆண்டு கண்டமை ஆகும். தமிழர்க்கெனத் தனி ஆண்டு மானம் வேண்டும் என்றும், அவ்வாண்டுமானமும் உலகம் போற்றும் ஒப்பற்ற மறைநூலை ஆக்கிய தமிழ்ப் பேராசிரியர் திருவள்ளுவர் பெயரால் அமைதல் வேண்டும் என்றும் குறிக்கொண்டு ஆய்ந்தார். சிலம்பு மேகலை முதலாம் நூல்களுக்கு முற்பட்டதும், சங்கநூல் ஆட்சியைக் கொண்டதும், தொல்காப்பிய நெறியில் அமைவதுமாம். அந்நூலின் நடையும் பொருளமைதியும் கொண்டு அதன் காலத்தைக் கி.மு. 31 எனத் தீர்மானித்தார் அடிகள். திருவள்ளுவர் திருநாள் வைகாசித் திங்கள் பனை (அனுட) நாள் எனவும் திட்டப்படுத்தினார்.

களின் இத்திட்டத்தை ஏற்றுத் 'திருவள்ளுவர் திருநாட் கழகம்' என ஓர் அமைப்பு உருவாகித் திருநாள் விழாவும் நடாத்தியது. அக் கழகத்தின் மலர் ஒன்று மிக அரியது ஆகும். அடிகளார் தந்த இத் திட்டமே இந்நாளில் தி.மு., தி.பி. எனப்பொது மக்கள் வழக்கிலும், அரசிலும் வழங்கத் தலைப்பட்டுள்ளதாகும். இதனை ஏற்றுப்போற்றிய நாடுகளில்