உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழித் தூய்மை :

தமிழ் மலை

71

முற்றுந் தனித்து இயங்கமாட்டாக் குறைபாடுடைய ஆங்கில மொழியையே இயன்ற மட்டும் தூய்தாய் வழங்குதலில் கண்ணும் கருத்தும் வைக்கவேண்டும் என்று அம்மொழிக்குரிய ஆங்கில நன்மக்கள் ஓயாது வற்புறுத்தி வருகுவாராயிற் பண்டைக் காலந் தொட்டே நாகரிக வாழ்க்கையிற் சிறந்தாராய்த் தாம் ஒருவர் கீழ் அடங்கிவாறாது பிறமொழி பேசவாரையும் தம்கீழ் அடக்கி வைத்துத் தமது செந்தமிழ் மொழியையே நீண்டகாலம் வரையில் தூய்தாய் வழங்கி வளர்த்து வாழ்ந்து வந்த தமிழ் மக்களின் கால்வழியில் வந்தோரான நாம் நமது அருமைச் செந்தமிழ் மொழியைத் தூய்தாய் வழங்குதலில் எவ்வளவு கண்ணும் கருத்தும் வைக்கவேண்டும்.

-அறிவுரைக் கொத்து 127-8.

யாம் நாயகர் அவர்களின் நூல்களைப் பயின்று அவர்களை அடுத்த இளமைக் காலத்தில் நாயகர் அவர்களின் உரைநடையைப் போல், வடசொற் கலப்பு மிகுதியும் உடைய ஓர் உரைநடை எழுத எமக்கும் ஒரு சிறு விருப்பம் உண்டாயிற்று.

என்றாலும், நக்கீரர் சேனாவரையர் சிவஞான முனிவர் முதலிய உரையாசிரியன்மார் வரைந்த தனித்தமிழ்த் தீஞ்சுவை உரைநடையிற் பெரிதும் பழகிய எமதுள்ளத்தை வடசொற் கலந்த நடைக்குத் திருப்புவது எளிதில் இயலவில்லை.

சொல்லாய்வு :

-

சோமசுந்தர நாயகர் வரலாறு 22.

பருத்துயர்ந்த மரங்கள் நெருங்கிய காட்டை 'வல்லை' என்றும், சிறுமரங்கள் மிடைந்த காட்டை 'இறும்பு' 'குறுங்காடு? என்றும், சிறு தூறுகள் பம்பிய காட்டை 'அரில்' 'அறல்' ‘பதுக்கை' என்றும், மிக முதிர்ந்து முற்றிப் போன மரங்களையுடைய காட்டை 'முதை' என்றும், மரங்கள் கரிந்து போன காட்டைப் 'பொச்சை' 'சுரம்' 'பொதி' என்றும், அரசனது காவலிலுள்ள காட்டைக் கணையம்' 'மிளை', அரண்' என்றும் பண்டு தொட்டுத் தமிழ் மக்கள் வழங்கி வந்திருக்கின்றனர். சிறுவர்க்கான செந்தமிழ். 44

<

பண்டை மக்கள் விலங்குகளுக்கு அஞ்சிக் கீழே இருக்க இடம் பெறாதபோது நீண்டுயர்ந்த மரங்களின் மேற்பருத்த கிளைகளிற் குடிசைகள் கட்டி அவற்றின்கண் இருந்து உயிர்