உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

3.

4.

5.

6.

7.

8.

9.

10.

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

என் வாழ்க்கையில் எல்லாச் சடங்குகளையும் தனித் தமிழிலேயே நடப்பிப்பேன்.

குல, இன வேறுபாடுகளை நான் ஒப்புகிலேன். அவற்றின் பெயரையோ கொள்கைளையோ நான் எவ்விடத்தும் எந்நிலையிலும் கடைப்பிடியேன்.

மதவேறுபாடுபற்றி நான் எவர்மீதும் வெறுப்புக் கொள்ளேன்.

தமிழ்மொழிக்கும் நாட்டிற்கும் பண்பாட்டிற்கும் இழுக்கோ கேடோ செய்யும் எவ்வகைக் குழுவிலும் வினைப் பாட்டிலும் நான் ஈடுபடேன்.

அவ்வப்பொழுது வெளியிடப்படும் தலைமைக் கழகக் கட்டளைகளை ஏற்றுச் செயற்படுத்த நான் எப்பொழுதும் அணியமாக உள்ளேன்.

நான் கட்சியிற் சேர்ந்திருப்பினும் தமிழ் முன்னும் கட்சி பின்னுமாகக் கொண்டுள்ளேன். ஆதலால் தமிழுக்கு முட்டுப்பாடு நேருமிடத்துக் கட்சியினின்று விலகி விடுவேன். எக்கரணியத்தையிட்டும் கட்டாய இந்தியை அல்லது நடுவணரசின் இந்தித் திணிப்பை ஏலேன்.

உ.த.க. ஆட்டை விழாவோ சிறப்பு மாநாடோ (நான் சேரக்கூடிய) பொது வகைக்கூட்டமோ நடைபெற நாட்குறிக்கப்பட்டபின், அதே நாளில் நிகழ ஏற்பாடாகும் என் கட்சிக் கூட்டத்திற்கோ வேறுமாநாட்டிற்கோ நான் செல்லேன்.

உ.த.க. சட்டதிட்டங்கள் எல்லாவற்றையும் படித்துப் பார்த்தேன். அவற்றைக் கைக்கொள்ள முற்றும் உடன் படுகிறேன். இது என் உறுதிமொழி.

கைவரி

குறிப்பு : உ.த.க. உறுப்பினர்கள் மேற்காணும் முறையில் வெண்டாளில் ஒரு பக்கம் உறுப்பினர்சேர்ப்பும், மறுபக்கம் உறுதிமொழியும் எழுதிக் கைவரியிட்டு விடுக்க வேண்டும். (இது தற்காலிகமானது தலைமையகம் அச்சிட்டு வழங்கும் வரை)