உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ய

பாவாணர்

233

(இந்திய எதிர்ப்புத் தொண்டாற்றும் தனியார்க்கும் படைஞர்க்கும் பயன்படுமாறு இந்நூல்எழுதப்பட்ட தென்றும், புன்செய்ப் புளியம் பட்டி மறைமலையடிகள் மன்றப் பாவாணர் நூல் வெளியீட்டுக் குழுவின் விருப்பத்திற்கிணங்கி. எழுதப் பட்டதென்றும் முகவுரையில் குறிக்கிறார் பாவாணர்.காட்டுப்பாடி விரிவு, 17 கும்பம், 1999 (29-2-68) ஞா.தே. என்பவை இடமும் காலமும் ஒப்பமும். 89 பக்கங்களைக் கொண்ட ச்சுவடி

முற்படை, இந்திவரலாறு, இந்தியால் விளையுங் கேடு, இந்திப் போராட்டம், பல்வேறு செய்திகள், முடிபு என்னும் ஆறுபெரும் பகுப்புகளும் மூன்று பின்னிணைப்புகளும் கொண்டது. விலை உருபா.1)

கழக வெளியீடு - 172.

இயற்றமிழ் இலக்கணம்

4,5,6 ஆம்பாரங்களுக்குரியது.

திருச்சி,புத்தூர்ப் பிஷப்ஹீபர் கலாசாலைத் தமிழாசிரி யன் வித்வான் ஞா.தேவநேயப் பாவாணன், B.O.L., எழுதியது.

பாடநூல் குழு ஒப்புதல் பெற்றது.

முதற்பதிப்பு சூலை 1940; ஐந்தாம் பதிப்பு 1943.

இதன் ஒளிப்படி வழங்கியவர் பூங்காவனர்.

எழுதியுள்ளார்.

(முகவுரை, ஒருபக்கம் பாவாணர் கையெழுத்துஞா. தே.பா. திருச்சிப்புத்தூர் 23-12-34. எழுதிவைத்து ஏழாம் ஆண்டு வெளிவந்தது. இந் நூல் விளங்க வைத்தல் என்னும் ஒரே நோக்கம் பற்றி எழுதப்பட்டது என்பது இதனைப் பயில்வார் நன்குணர்வர் என்கிறார். மொத்தப்பக்கம் 148. ஐந்தாம் பதிப்பின் விலை 15 அணா 6 பைசா. கழக உரிமை.)

கழக வெளியீடு : 566.

முதற்பாகம் முதற்பதிப்பு திசம்பர் 1950

சேலம் நகராண்மைக் கல்லூரித் தமிழ்த் திணைக்களத் தலைவன் பண்டித புலவ வித்துவ ஞா. தேவநேயன், பி.ஓ.எல்., இயற்றியது.

முகவுரை - இரண்டு பக்கங்கள் ஞா.தே.