உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

235

நண்பர்கட்கும் யான் மிகவும் கடப்பாடுடையேன் என்கிறார். இடம் நாள் ஒப்பம் : புத்தூர் திருச்சி. 29-1-40: ஞாதே.)

ஒப்பியன் மொழி நூலுக்கு ஒரு மதிப்புரை.

பாளையங்க கோட்டையில் பாவாணர் பயின்ற நாளில் ஆங்குத் தலைமைத்தமிழ் ஆசிரியராக இருந்த G.S. துரைசாமி என்பார் ஒப்பியன் மொழி நூலுக்கு ஆங்கிலத்தில் வரைந்த மதிப்புரையின் தமிழாக்கம் இது. பாவாணர் செய்தது. தமிழ் கிரேக்கு ஆங்கிலம் மூன்றினும் வல்லாரான துரைசாமிப் பிள்ளையது என்பது முற்குறிப்பு.

நல்லூர், யாழ்ப்பாணம், இலங்கை 15-7-1940.

ஆசிரியர் திருவாளர் ஞா. தேவநேசன் அவர்கள் அன்புடன் உதவிய ஒப்பியன் மொழிநூல் கிடைத்து வாசித்து மகிழ்ந்தேன். இந்நூல் ஏடு தொறும் இன்பம் பயப்பது. தமிழின் தொல் சிறப்பு தமிழ்மக்களின் பண்டைமேனிலை தமிழ்மொழிகளின் வரலாறு முதலியவற்றைத் தெள்ளிதின் விளக்குவது. ஆசிரியரின் ஆராய்ச்சி வன்மை சொல்லிறந்து நிற்பது. இப்பேரறிவாளர் தமிழ் நாட்டுக்குச் செய்துள்ள பேருதவியைத் தமிழ் உரிமை மிக்குடைய தமிழ்மக்கள் யாவரும் பாராட்டுங் கடப்பாடுடையர். தமது நலத்தைக் கருதாது உழைக்கும் இத்தகைய கலைவல்லாரைத் தமிழ்நாடு பொன்னேபோல் போற்றுதல் வேண்டும்.

தமிழ்மொழிக்குத் தாழ்வு நேர்ந்துவிடுமோவெனக் கலங்கிநின்ற இக்காலத்தினாற் செய்த நன்றியை ஞாலத்தின் மாணப் பெரிதாகத் தமிழ்மக்கள் போற்றுவாராக. தமிழுரிமை மிக்குடையேம் எனக் கூறிக் கொள்ளும் தமிழ்மக்கள் சொல்லளவில் நின்றுவிடாது இந்நூலை வாங்கிக் கற்றுப் பயன் பெறுவாராக.

G.S. துரைசாமிப் பிள்ளை.

கட்டாய இந்திக் கல்விக் கண்டனம்

செந்தமிழ்க் காஞ்சி முதற்பாகம்

முகப்பில் காந்தியார் படமுடையது

தேசாபிமானத் தண்டமிழ்த் தொண்டன்

1937