உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

புகழுடம்பும் பூதவுடம்பும்

புகழை ஓர் உடம்பாக உருவகிப்பது இலக்கிய மரபு. பூதவுடம்பு தாய்வயிற்றில் கருவாகத் தொடங்கிப் படிப்படியாக வளர்ந்து பத்தாம் மாதம் முழு வளர்ச்சியடைந்து, குழவியாகப் பிறக்கின்றது. இந்நிலைமையைப் புகழுடம்பிற்குப் பொருத்திக் கூறியுள்ளார் ஆசிரியர் வள்ளுவனார். தனக்கென வாழப் பிறர்க்குரியாளன் பொதுநல வூழியத்தைத் தொடங்கும் போது, புகழுடம்பு கருக்கொள்கின்றது. ஊழியம் நீட நீடப் புகழுடம்பு வளர்கின்றது. பூதவுடம்பு தளர்கின்றது. சாக்காட்டில் புகழுடம்பு பிறக்கின்றது. பூதவுடம்பு இறக்கின்றது. இதையே 'நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்' என்றார். திருக்.மர.315

இன்பவகை

உலகவின்பம், ஒருபுலவின்பமும் பலபுலவின்பமும் ஐம்புலவின்பமாகிய முற்றின்பமும் என முத்திறப்படும். வண்ண வோவியமும் எழுவும் யாழும் இன்னடிசிலும் நறுவிரையும் மெல்லணைக் கட்டிலும் போல்வன ஒரு புலவின்பமே தருவன; அழகிய வளமனையும் பல்வகைப் பழுமரக்காவும் போல்வன பலபுலவின்பந் தருவன. கட்டழகியான கற்புடை மனைவியெனின் ஐம்புலவின்பமும் ஒருங்கே தரவல்லாள். திருக். மர.36

விலக்கா விருந்து

அக்காலத்தில்

மொழியாராய்ச்சி

யின்மையாலும்

வடசொற்கள் தமிழில் அருகியே வழங்கியமையாலும் அவற்றைத் திருவள்ளுவர் கண்டு விலக்க முடியாமற் போயிற்று. எதுபோல வெனின், ஆயிரக் கணக்கானவர் உண்ணும் ஒரு திருமண விருந்தில் ஒரு சில அயலார் அமர்ந்திருப்பினும் பரிமாறிகள் அவரைக் கண்டு விலக்க முடியாதது போலவென்க. திருக். மர.732.

படைக்கல நூல்

போர்க் களத்திற்குப் படைக்கலம் போல் (மொழிப் போராட்டத்திற்கும்) சில கருவி நூல்கள் வேண்டும்.

முதன்மொழி, 1, 1:4.