உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் கா.சு.வின் தமிழர் சமயம் ஓர் ஆய்வு

97

திருக்கோயில் பூசை தமிழில் நடத்துதல், கல்வி நிலையம், உண்டுறை விடுதி முதலியன நிறுவி நடத்துதல், குலத்தடையின்றித் தக்க அருச்சகர்களையும் வேலைக்காரர்களையும் நியமித்தல், சை, கூத்து முதலிய கவின் கலைகளைப் பேணுதல், திருமடங் களின் செல்வத்தைத் தமிழர்க்குப் பயன்படுத்துதல் ஆகியவற்றுக் குரிய கிளர்ச்சியை டைவிடாது நடாத்துதல் வேண்டும் என்கிறார்.

சட்டம்

தமிழர் திருமணத்துக்குப் பலர் அறியத்தாலி கட்டுதல் ஒன்றே போதுமானதென்ற விதி தெளிவாக்கப் படுதல்வேண்டும். நெருப்பு வழிபாடு முதலிய சடங்குகள் இன்றியமையாததல்ல என்ற கொள்கை நிலை பெறுதல் வேண்டும். கணவனும் மனைவியும் தக்க காரணங்களால் ஒத்து வாழக் கூடாத இடத்தும் பிரிதல் கூடாதென்ற இந்து சட்ட விதி ஒழித்தல் வேண்டும். பிரிந்தார் மறுமணம் செய்து கொள்ளச் சட்டம் இடங்கொடுக்க வேண்டும்.

குழந்தைகளைத் தத்து எடுத்து (சுவீகாரம் செய்து) 'அக்கினி காரியம்' செய்யப்பட வேண்டுமென்ற விதி தமிழருக்கில்லை. தேச வளமைப்படி மஞ்சள் நீர் குடிப்பது அதன் சார்பான சடங்காகும். தத்து எடுக்கும் புதல்வனை ஈதலும் ஏற்றலும் காட்டக்கூடிய சான்றுகளே இந்நாட்டில் இக்காலத்தில்போதுமானவை. விதவைகள் தத்தெடுக்கக் காரணமாகாத தடைகள் இருத்தல் கூடாது. விதவைச் சொத்துரிமை (Widow's Estate) என்ற குறைவு பட்ட சொத்துரிமை இந்துச் சட்டத்திலிருந்து எடுபட வேண்டும். அமைப்பு

இன்னின்ன சட்டச் சீர்திருத்தம் வேண்டற்பாலது என்று தீர்மானிப்பதற்குத் தமிழருள் தக்க வழக்கறிஞர்களைத் தெரிந் தெடுத்த சிறு கழகம் ஒன்று அமைக்க வேண்டும்.

இவற்றையெல்லாம் நடைமுறைப் படுத்துதற்குத் தமிழர் சமய சங்கம் என ஓர் அமைப்பு வேண்டும். அவ்வமைப்பில், தமிழ் உயர்தனிச் செம்மொழி என்னும் கொள்கையுடையவராய்த், திருவள்ளுவர் நூலிற் கூறப்படும் முழுமுதற் கடவுளின் உண்மை யையும் தன்மையையும் ஒப்புக்கொள்பவராய் உள்ள யாவரும் உறுப்பினராதற்குரியர். அவர் அருள் ஒழுக்கத்தையும் வடிவ