உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிறைவுரை

தமிழ்க் கா.சு.வின் தமிழர் சமயம் ஓர் ஆய்வு

99

தமிழர் மதம் என்றும், பழந்தமிழ்க் கொள்கையே சைவம் என்றும், சாதி வேற்றுமையும் போலிச் சைவரும் என்னும் நூல்கள் எழுதிய மறைமலையடிகளாரும், தமிழ்க் கா.சு.ம் வள்ளுவர் வள்ளலார் வழித் தொண்டுகளுக்குத் தம்மை ஆட்படுத்திக் கொண்டவர்கள். சமயமும் பகுத்தறிவும் அல்லது சமயமும் சீர்திருத்தமும் இருகோடிகள் என்பதைப் பொய்ம்மைப் படுத்தி ரண்டற்கும் இணைப்புப் பாலமாகத் திகழ்ந்தவர்கள்! இவர்கள் கொண்ட சமயச் சால்பும் சீர்திருத்த நோக்கும் பகுத்தறிவுப் பார்வையும் தமிழினத்தை ஒன்று படுத்துதற்கு வாய்த்த ஒரு பெரும் பேறாம்! அப்பேறு வாய்க்கத் தமிழார்வலரும் இறையன்பரும் இணைந்து செயல்படும் நாளே நன்னாள்! அந்நாள் அணித்தே கிளர்வதாக!