உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

தமிழ்மொழி மீது கொண்டுள்ள எண்ணம் முற்றுநாள் எந்நாளோ தெரியவில்லை. அதற்கு ஆண்டவன் அருளும் தமிழ்மக்கள் ஒற்றுமையும் வேண்டும்".

திருவாரூர் விருத்தாசலர் கலியாண சுந்தரர் என்பதே திரு.வி.க. என்பதன் விரி. ஆனால் சிலர், திருவைத்திரு வாளராகக் கருதிக்கொண்டனர். அக் கருத்தை விளக்குதல் வழியாகத் தமிழ்த் திருவைத் தம்மொடும் இயைத்துக் கொள்கிறார்:

"சிலகாரணம் பற்றி வடமொழி ஸ்ரீ தமிழ்க்திருவாக மாற்றப் பட்டது. அம் மாற்றம் எங்கள் திருவுடன் முட்டலாயிற்று. எங்கள் திருவின் உண்மை தெரியாதார் நாங்கள் ஸ்ரீக்குப் பதிலாகக்த திருவை உபயோகிக்கிறோம் என்று கருதி ஸ்ரீவி. உலகநாத முதலியார் என்றும், ஸ்ரீ.வி. கலியாணசுந்தர முதலியார் என்றும் எழுதிவிடுகிறார்கள். இத்தொல்லை பெரிதும் பத்திரிகை உலகில் நிகழ்ந்து வருகிறது. இதை நீக்கும் பொருட்டுஎன் நூல்களின் முகப்பில் திருவாளர் திரு.வி. கல்யாணசுந்தரனார் என்று என் பெயர் பொறிக்கப்படுகிறது" (வா.கு:17)

.

.

'ஸ்ரீ' 'திரு' மாற்றப் போராட்டம் பெரிதாக நடைபெற்ற நாளுண்டு. அந்நாளில் திரு.வி.க. 'திருவில்' நின்றதும் அவர்தம் தனித்தமிழ் நாட்டத்தைப் புலப்படுத்துவதாம்.

"செவ்விய தமிழ்நடை, தமிழ் நாட்டிலுள்ள பல்லோர்க்கு இதுபோழ்து பயன்படாதென்று கருதித் தேச பக்தனுக்கெனச் சிறப்பாக ஒருவகை உரைநடையைக் கொண்டுள்ளேன். இது காலைத் தமிழ்நாட்டு வழக்கிலுள்ள பிறமொழிக் குறியீடுகளையும் இக்கால வழக்குச் சொற்களையும் ஆன்றோராட்சி பெறாத சில முறைகளையும் பண்டைத் தமிழ்மக்கள் கோலிய வரம்பிற்குப் பெரிதும் முரணாதவாறு ஆண்டு வருகின்றேன்" என்று எழுது கின்றார்.

தம் உரை பண்டையோர் முறைக்கு முரணே என்றும், ஆயின் பெரிதும் முரணாதவாறு எழுதப்படுகிறது என்றும், அதுவும் இது போழ்துள்ள பயன்கருதியதென்றும் விளக்கி யுள்ளதையும் கூர்ந்தறிக. 1920 சார்ந்த எழுத்து இஃதென்றும் இவ்வெழுத்தின் பின் ஒரு மணிவிழாக்காலம் கடந்துவிட்டது என்றும் நினைவுகூர்தல் வேண்டும்! எனினும் இந்நாள் இதழ்கள், கதைகள் ஏன் நூல்களும் கூடத் தமிழாக்க நடையிற் செல்கின்றனவா?