உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணைப்பு : 3

இரங்கல் மாலை : 2

தமிழ்த் திருவாட்டி திருவரங்க நீலாம்பிகையார் இறையடியெய்தியமைக்கு இரங்கித்,

திருவரங்கர் இளவலார் திரு. வ. சுப்பையா பிள்ளை அவர்களுக்கு

அறிஞர் பெருமக்கள் விடுத்த இரங்கலுரைகளுள் சில

திருவாட்டி நீலாம்பிகை அம்மையார் சிவபெருமான் திருவடி நிழல் அடைந்த செய்தியறிந்து பெரிதும் வருத்தம் அடைகின்றேன். தமிழ்ப் புலமை சான்ற அவர்கள் அணிமையில் கணவனை இழந்த துன்பத்தைப் பொறுத்துக்கொண்டு தம் பிள்ளைகளுக்குத் துணையாக இருக்க வேண்டிய இங்ஙனம் மறைந்தது மறைந்தது ஆற்றொணாம் ஆற்றொணாம் துயரம் தருவதே! என் செய்யலாம்! ஊழ்வலி பெரிதன்றோ!

இளம் நிலையில்

எல்லோர்க்கும் இறைவன் ஆறுதல் அளிப்பாராக.

தங்கள் மகன் என்று குறிப்பிட்டு அன்பு பாராட்டி எனக்குக் கடிதம் எழுதிய அம்மையின் மறைவு குறித்த என் ஆழ்ந்த துயரத்தை இதன்மூலம் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார்,

அண்ணாமலைநகர்.

திரு. நீலாம்பிகையின் பருவுடல் பிரிந்தமை கேட்டுத் பிரிவு தங்கட்கும்

திடுக்கிட்டேன். அம்மையாரின் தமிழ்நாட்டுக்கும் சைவ உலகுக்கும் பெருந் துன்பத்தை விளைத்துள்ளது! ஈடு செய்தல் அருமை. குழந்தைகட்கு ஆறுதல் கூறுக. தங்கட்குக் கடமை பெருகியது. எல்லாம் ஆண்டவன்

செயல்.

திரு. வி. கலியாணசுந்தர முதலியார், சென்னை.