92
இளங்குமரனார் தமிழ்வளம் - 27
என்போன்ற முதியவர்களுக்குக் கடமை செய்யவேண்டும். அவர்கள் போய்விட நான் இருந்து பார்க்க விதித்திருக்கிறது” என்று நொந்துகொண்டே இருந்தார். இளமையிலேயே கைம்மைத் துயரும், பின்னே அடுத்தடுத்த இழப்புத்துயரும் பட்ட அந்த இளகிய உள்ளம் முதுமை நெருங்க நெருங்க ஆற்றிக்கொள்ள முடியவில்லை. அந்நிலையில் அவர்தம் ஆருயிர் 2-9-52 இல் அமைதியடைந்தது.
'முன்னையிட்ட தீ முப்பு ரத்திலே பின்னை யிட்டதீ தென்னி லங்கையில் அன்னை யிட்டதீ அடிவ யிற்றிலே யாலும் இட்டதீ மூள்க மூள்கவே'
என முற்றும் துறந்த பட்டினத்தடிகளையே அரற்ற வைத்த அன்னையின் பிரிவு இவரை எளிதில் வாட்டதிருக்குமோ?
அன்னையைப் பேணுதற்கெனவே தம் குடும்பத்தைப் பாளையில் தங்க வைத்திருந்த வ.சு. 1953 இல் சென்னைக்கு அழைத்துச் சென்றார். அவர் முன்னே தங்கியிருந்த மனை அரங்கர் நினைவாகத் திருவரங்க நிலையம் ஆயிற்று. 'பெருவரங்கள் அருளரங்கர்' நினைவிலே தோய்ந்து அவர்தம் பெயர் விளங்கவும், தம் பிறவிக் கடன் சிறக்கவும் தக்க வகையில் பணியினைத் தொடர்ந்தார்.