94
இளங்குமரனார் தமிழ்வளம் - 27
பின்னர்க் கழக ஆட்சியாளர் அவர்கள், கழகப்பணிக்குத் தகுதி வாய்ந்த இவரைப் பயன்படுத்திக் கொள்ளுதல் சிறப்பாக இருக்கும் எனத் தேர்ந்தார். இயல்பாகவே அமைந்த உறவு முறையும், இவர்தம் பண்பு நலம் அறிவுக்கூர்ப்பு, செயல் திறன் ஆகியவற்றால் அமைந்த பற்றுதலும் கழகத்துணை மேலாளர் ஆக்குதற்கு முன்னின்றன திரு. கலியாணசுந்தரர் கழகத் துணை மேலாளராகிச் செய்த கடமைகளும், தம்மிடம் நடந்துகொண்ட பண்பான நடைமுறையும் அன்பும் ஆட்சியாளரைப் பெரிதும் கவர்ந்தன. அக் கவர்ச்சி, தம் மகளார் தமிழரசியின் நல்வாழ்வின் மேல் படிந்தது. மங்கையர்க்கரசியாரும் மகளார் அரசியாரும் அத்திட்டத்தில் ஆர்வம் உடையவராக இருந்தனர். பழம்நழுவிப் பாலில் விழுந்தது போல இரு வீட்டாரும் இனிதுமகிழ்ந்தனர். தாய்மாமனார் பிள்ளைக்கும் தம் மகளைக் கொடுப்பது இருபாலும் இனிக்கும் செய்திதானே. இவர்கள் திருமணம் நான்றோர் வாழ்த்தச் சைவ நெறிப்படி 11-6-1956 இல் நிகழ்ந்தது. "முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்; மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்;
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்'
ன்பது போல் உசாவி அறிந்து ஒவ்வொன்றாகத் தெரிந்து கொள்ளும் நிலையில் இவர்கள் திருமணம் நடந்ததில்லை. கொண்டவர்களும், கொடுப்பவர்களும் பழகிப்பயின்ற பான்மையர்! ஒருகுடும்பமும் ஒரு கலப்புமாகிய உறவினர்! இத்தகைய வாய்ப்பு மேலும் மேலும் நெருக்கத்தை உண்டாக்கவே பெரிதும் உதவும். கலியாணசுந்தரர் - வடிவழகியார் திருமண நிகழ்ச்சியை அறிந்த சான்றோர் வாழ்த்தினார். பாவலர் பாட்டி சைத்தனர். உள்ளார்ந்த அன்பர் திருமணம் எவருக்கே உவகை தாராது?
"இப்பாரில் முதன்முதலாய் வள்ளுவர்நாள் கண்டோன்; ஏற்றமுறும் தமிழ்க்கொடியை எழிலுறவே அமைத்தோன்; தப்பாமல் வரலாற்றுச் சான்றுகள்தாம் மிளிரச்
சங்கம்வளர் காலமுதல் தற்காலம் வரையில்
ஒப்பில்லாத் தமிழ்நூல்கள் பலப்பலவும் ஆக்கி
உலகத்துக் குதவுகின்றோன்; உயர்கலைஞன்எங்கள்
சுப்பையா பிள்ளைதவச் செல்விவடி வழகி