இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
33
கழக ஆட்சியர் வ.சு.வரலாறு
113
அன்றோ! பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தது போலப் பைந்தமிழர்க் கெல்லாம் பயன்படும் கலைச் செல்வங்களைப் படைப்பாரைத் தேடிக் கண்டு நாட்டுச் செல்வமாக்கிய நல்லவர் நம் வ.சு. அவர்கள். 'இசைச்சொல் அளவைக்கு எந்நா நிமிராது' என்றே கூறல் அமையும்.
er
“கம்பன் மாபெரும்புலவன். அவன் செயலால் இந்நாடு முக்காலத்தும் பெருமையுறுகின்றது. ஆயினும் என்னை? வெண்ணெய்ச் சடையன் என்னும் புரவலன் ஒருவனை அக் கம்பனோடே ஒருசேரக் கடவுள் படைத்திரான் எனின் கம்பன் தன் மாபெரும்காப்பியத்தையே படைத்திரான் என்பதில் சிறிதும் ஐயமில்லை என்று மூலையில் இருந்து முற்றத்துக்கு வந்த ஒருவர் அவரைக் குறித்து இயம்புவது இவ்விடத்தே எண்ணத் தக்கது.
ஜெ இ
பங்குக்
தவி
ing