கழக ஆட்சியர் வ.சு.வரலாறு
117
'அச்சுப் பணியோ, நச்சுப் பணியோ' என்பது பழமொழி 'நச்சு' என்பது நஞ்சு, நச்சரிப்பு என்னும் இருபொருளுக்கும் இயைந்த சொல். கொடுமையும் தொல்லையும் வாய்ந்தது என்பதாம்; ‘பல்லக்கு ஏறுவதும் சொல்லாலே, பல் உடைபடுவதும் சொல்லாலே, பல் உடைபடுவதும் சொல்லாலே' ஆதலால் சொல்லைப் பக்குவமாகச் சொல்லத் தெரிய வேண்டுவது போலவே சொற்பிழை வராமல் அச்சிடம் தெரியவும் வேண்டும். 'கல்லாரும் கற்றாரும் சொல்லாலே வெளிப்படுவர்' என்பது மட்டுமன்று; “காக்கப்படுவன இந்திரியம் ஐந்தினினும் நாக்கல்ல தில்லை நனிவெல்லுமாறே” என்பதுபோல், காவாவிடின் வெல்லும் சொல்லே, கொல்லும் சொல்லாய்க் குலை நடுங்கச் செய்யும்! குடிகெடச் செய்யும்! ஆதலால்தான் வண்ணச் சரபம் தண்டபாணி அடிகள்,
“தட்டா னிடத்தினில் தங்கப் பணிகள் சமைப்பதுவும்
வட்டாடு வாரைத் திருத்திநல் மார்க்கத்தில் வைப்பதுவும் பட்டாங்கில் உள்ளதைக் காகிதத் தச்சிற் பதிப்பதுவும் குச் தொட்டார் மனத்தைப் பலப்பல நாளும் துயர்செய்யுமே" எனப் பாடினார்.
ய
இத்தகு துயர்மிக்க அச்சுப் பணியில் தோய்ந்த சுப்பையவேள் எத்தகு நூல்களைத் தோற்றுவித்தனார் என்பதை விளக்குகிறார் பாவேந்தர் :
"நூலெல்லாம் விளையுமிங்கே நூறாயி ரக்கணக்கில், நூல்ஒவ்வொன்றின்
மேலெல்லாம் அழகு செய்யும் சுப்பையன் மிகுதிறமை!
அதுவுமின்றிக்
காலெல்லாம் சிலம்பொலிக்கத் தமிழரசி உலகரங்கு காணும்வண்ணம்
தோலெல்லாம் சளைப்பயன் கொள் புதும்பபுது நூல் ந்து தோற்றுவிப்பான் அந்த மேலோன்,'
"ஒவ்வொரு புத்தகத்துக்கும் அக அழகும் உண்டு, புற அழகும் உண்டு. அக அழகு என்பது நூலில் உணர்த்தப்படும் கருத்துக் களின் தூய்மை, உயர்வு என்பனவும் மொழிநடையின் செம்மை சிறப்பு என்பனவும் ஆகும். புற அழகு என்பது அச்செழுத்துகளின்