உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




122

இளங்குமரனார் தமிழ்வளம் - 27ஓ

கழகப் புலவர்களுள் ஒருவராக விளங்கியவர் திரு. தி. சங்குப் புலவர். அவரால் தமிழ்விடுதூதும், கைந்நிலையும் உரைவளம் பெற்றன. சில இலக்கண நூல்களும் துணை நூல்களும் வரைந்தார்.

மாவட்டக்கல்வி அலுவலராகத் திகழ்ந்த திரு. பாலகிருட்டிணன் (இளங்கண்ணனார்) ஆங்கிலமும் தமிழும் கைவரப்பெற்ற பெரும் புலமையாளர். அவர் சங்க இலக்கிய இன்கவித் திரட்டினை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். கீழ்க் கணக்கு நூல்களில் திருக்குறளும் நாடியாரும் நீங்கிய பதினாறு நூல்களும் அவரால் ஆங்கில ஆக்கம் பெற்றன.

புகழ் வாய்ந்த ஆங்கிலக் கதை நூல்களைத் தமிழ்மக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டுமென வ.சு. விரும்பினார். அதனால் திரு.கு.பரமசிவம் அவர்களைக் கொண்டு ஐவன்கோ, டேவிட் காப்பர் பீல்டு முதலிய நூல்களை வெளிப்படுத்தினார். திரு. மு. சதாசிவம், திரு. க.வ. முத்தையா, திரு.எசு. தாசு. திரு. இரா. முத்துக்குமாரசாமி ஆகியவர்கள் வழியாகவும் பல ஆங்கில நூல்கள் தமிழாக்கம் பெற்று வெளிவந்தன.

தமிழ் இலக்கியப் பெருமையையும் வரலாற்றுப் பெருமை யையும் பிற நாட்டார் அறியுமாறு செய்ய ஆட்சியாளர் விரும்பினார். அதனால் மாவட்டக் கல்வி அலுவலராக இருந்து பன்மொழிப் புலவர் தி. பொ. கிருட்டிணசாமி முதலியார் அவர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஆத்திசூடி முதல் அறநெறிச்சாரம் முடிய நீதி நூல்கள் பத்தும் (Ten Tamil Ethiscs) அழகுறக் கழகம் பதிப்பித்துள்ளது. டாக்டர். ஜி.யு. போப்பையரின் திருக்குறள், நாலடியார் ஆங்கில மொழி பெயர்ப்பு நூல்கள் எட்வர்ட் ஜுலிட் ராபின்சன் என்பாரது “Tamil Wisdon" என்னும் நூல் திரு. கனக சபைப் பிள்ளை அவர்களின் "Tamils 1800 Years ago" என்னும் நூல், பேராசிரியர் பூரணலிங்கம் அவர்களின் “Tamil India" என்னும் நூல், டாக்டர். மு.வ. வின் "The Nature in Sangam Literature" என்னும் நூல், டாக்டர் வ.சுப. மாணிக்கனாரின் "The Concept of love" என்னும் நூல், திரு. ஜே. வி. செல்லையாவின் 'Paththu Pattu' என்னும் நூல் முதலாகப் பழைய நூல்கள் அழகிய முறையில் ஆங்கிலத்தில் வெளியிடப்பெற்றன.

ஜேம்ஸ் ஆலன் இயற்றிய ஆங்கில நூல்கள் அனைத்தும் தொடராக வெளிப்படுத்தப்பெற்றுள, இஃது ஓர் அரிய செயலென