உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




130

இளங்குமரனார் தமிழ்வளம் - 27

பேதையுலகம் 'குழவிப்பலி' யாக்கிக் கொலைக்கும் முற்பட்டது. இறைவனுக்குப் பூவைப் படைத்தலைப் பூப்லியாகக் கண்ட தமிழகம் 'புலைப்பலிக்கும்' இடந் தந்துவிட்டது. அதனால், 'உயிர்ப்பலியுண்ட மயிர்க்கண் முரசம்' என்ச சங்கப் பாடலே சாற்ற நேர்ந்தது. இவ் வுயிர்ப்பலி விலக்குதற்குத் தோன்றிய அமைப்பே பலி விலக்குச் சங்க' மாம்.

பாளையங்கோட்டையில் உள்ளது ஆயிரத்தம்மன் கோயில். அக் கோயிலில் பன்னீராண்டுகளுக்கு ஒருமுறை ஓர் எருமைக் கடா, கருக்கொண்ட ஓர் ஆடு, ஒரு பன்றி ஆகியவற்றைப் பலியிடுவர். இவ் வழக்கம் அதற்கு 48 ஆண்டுகள் முன்தொட்டே நடந்து வந்தது. அதனை நிறுத்துதற்கே இச் சங்கம் தோன்றியது.

பாளையங்கோட்டை வட்டாரத்தில் இருந்த அருளுள்ளங் கொண்ட. அனைவோரும் இப் பணியில் ஆர்வம் காட்டினர். திருவரங்கனார் தலைநின்றார். திரு.வ.சு. முதலியவர்கள் துணை நின்றனர். அருளாளர் திரு. ஸ்ரீபால், அவர்களும் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களும் கேட்டவர் உள்ளம் உருக அருளுரையாற்றினர். ஆனால், பலியூட்டும் ஆர்வலர்களுக்குப் பரிவுணர்வு வருதற்கு மாறாகப் பகையுணர்வு விஞ்சியது. 'வெட்டுக்குத்து கொலை கொள்ளை' நடக்குமென அச்சுறுத்தல் உண்டாயது. அறங்காவலர் உள்ளம் அருளாளர் பக்கம் சார்ந்தது. அறமன்றில் முறையீடு நிகழ்ந்தது. 27-7-37 இல் துணைத் தண்டனை அலுவலர் (Sub Magistrate) 144 தடை ஆணை பிறப்பித்தார். காந்தியடிகளும். சவகர்லால் நேருவும், பலியூட்டைக் கண்டித்துத் 'தொலை வரைவு' வழங்கினர். ஒரு திங்கள் போராட்டம் ஊர்வலம் - சுவரொட்டி பறைசாற்று -சொற்பொழிவு இன்னபிற நிகழ்ந்து ஓய்ந்தன. அரசுத் தடை ஆணையுடன், மக்கள் முயற்சியும் இணைந்த சீரால் பலியிடுதற்காகக் கொணர்ந்த எருமைக்கடா முதலியன பிழைத்தன. காவல் துறையின்ர கண்காணிப்பில் கோயிலில் அவை நலமாக உய்ந்தன.

இந் நிகழ்ச்சியில் சீரிய பங்கு கொண்டு விளம்பரப் பொறுப்பையும் இனிது மேற்கொண்டு வெற்றி கண்டவர் திரு. திருவரங்கனார்; துணை நின்றவர் திரு.வ.சு. செந்தமிழ்ச் செல்வி சிலம்பு 15, பரல் 12, சிலம்பு 16 பரல் 1 - ஆகியவற்றில் இச் செய்திகள் இடம் பெற்றுள. “கொல்லா விரதம் குவலயமெல்லாம் ஓங்க வேண்டும்" என விரும்பும் இவர் உள்ளம் இச் செயலால் வெளிப்படும். இவர்தம் பிற தொண்டுகளை மேல்வரும் பகுதி களில் தொடர்ந்து காண்போம்.