-ஓ கழக ஆட்சியர் வ.சு.வரலாறு
e
143
நூல்களையும் முயன்று இசைத் தட்டில் கொணர்ந்தனர் திரு.வ.சு. முருகன் வழிபாட்டு நூல் திரு. சீர்காழி கோவிந்தராசன் அவர் களாலும் அம்மை வழிபாட்டு நூல் சேலம் திருமதி செயலக்குமி அவர்களாலும் பாடப் பெற்று இசைத்தட்டாக வெளிவந்துள. 2 SS
அரசு பின்னே செய்தற்கு ஏற்கும் திட்டங்கள் பலவற்றை முன்னோடியாகச் செய்து காட்டிவருபவர் திரு.வசு. 'ஆட்சியாளர்' என்னும் பொறுப்பில் உள்ள பெயர்த்தொடர்பு, இத்தகைய செயல் தொடர்புக்குச் சான்று போலும்!
“வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண் ஊறெய்தி உள்ளப் படும்"
என்பதற்கு ஏற்ப இவர்தரும் செந்தமிழ்க்காவற் செயல்களால் அரசு மதித்துப் பாராட்டும் பல்வேறு பெருமைகளைப் பெற்றமை மேலே காணலாம்.
இவர்தம் தனித்தமிழ்க் கடைப்பிடி, கலைச் சொல்லாக்கப் பணி, ஆட்சிச் சொல் ஆக்கப்பணி, அறிவியல் நூல்கள் வெளியீடு, இலக்கியமா நாடுகளும் புலவர் மாநாடுகளும் நடத்துதல், தமிழிசைக் காதல் ஆகியனவெல்லாம் இவர்தம் செந்தமிழ்க் காவல் திறத்தை வெளிப்படுத்துவன. இவையெல்லாம் வெவ்வேறு பகுதிகளில் கூறப்பெற்றனவும், கூறப்பெறுவனவுமாம்.
"இந்தியக் கூட்டரசின் ஒரே மொழியாக இந்தி ஆட்சி செலுத்தப்போகின்றது என்பதனை அறிந்தவுடன், செந்தமிழ் மொழியின் சீர் உரிமை காத்திட, போர் எனப்புகலும் புனைகழல் மறவராய்ப் போர்ப்படை அமைத்துப் புறப்பட்ட தானைத் தலைவர் தண்டமிழ்க் காப்பாளராம் சுப்பையா அல்லரோ" என்று சி. இலக்குவனார் இயம்புவது எண்ணத்தக்கது.