148
இளங்குமரனார் தமிழ்வளம் - 27
செய்து யாவர்க்கும் பயனுற நல்குவர்” என்று தணிகைமணி வ.சு. செங்கல்வராய பிள்ளை எம்.ஏ., அவர்கள் வாழ்த்துரைத்தார்.
முதலமைச்சர் ஓமந்தூரார் அச்சகத்தைத் திறந்து வைத்து வாழ்த்துரைத்தார்.
"எனக்குப் பதினெட்டு ஆண்டுகளாக இவர்களைத் தெரியும். இவர்கள் புத்கதங்களே நான் வாங்கிப்படிப்பது. ஏன்? பிழை யின்றியும் அழகாகவும் தெளிவாகவும் இருப்பதினாலேயாம்.'
"நம் முன்னோர்கள் நமக்கு அழியாக் கருவூலங்களாக உணர்வு விளக்காகத் தந்த சுவடிகளை நாம் பொன்னினும் மணியினும் புகழ்மிக்க உயிரினும் போற்றிவரல் வேண்டும்.'
"எனக்குத் தெரிந்தவரை திரு. ஆறுமுகநாவலர் அவர்களே முதன் முதல் செந்தமிழ்ச்சீரிய நூல்களைப் பிழையின்றி அழகுறப் பதிப்பித்து வெளியிட்டுள்ளார்கள். அதன்பின் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் அத் தொண்டினைச் செவ்வனே செய்து வருகின்றார்கள். அம்மட்டுமின்றிப் புதிய முறைகளையும் கையாண்டு பல்வேறு சிறப்புக் கட்டம் அமைந்த பதிப்புக்களும் வெளியிட்டு வருகின்றார்கள். படிப்பு புத்தகம், படம், கேள்வி என்னும் என்றாலும் பரவவேண்டும், அம் மூன்றினையும் இக் கழகத்தார் செவ்வனே செய்து வருகின்றார்கள்.
"இருபத்தெட்டு ஆண்டுகளாகப் பல அச்சுக் கூடங்களில் பதிப்பித்துத் தனக்கென உரிய அச்சகம் இல்லாதிருந்த பெருங் குறை இன்று நீங்குகிறது. அச்சகத்துக்கு வழங்கும் திருப்பெயர் அப்பர் பெருமான் திருப்பெயராகும். அவர் நாமார்க்கும் குடியல்லோம் என்று உரங்கொண்டு மொழிந்து வெளிப்பட் டெழுந்து வெற்றியுடன் திகழ்ந்த தமிழ் நாட்டு முதல் சத்தியாக்கிரகி (அறப் போராளி) மக்களைக் கடவுள் தன்மைக்குக் கொண்டுபோவதே பெரியோர் குறிக்கோள். அவ் வுண்மை காட்டவே இப் பெயர் இங்கு அமைத்தனர் போலும” என்று நலஞ்சிறக்க வாழ்த்தினார் முதல்வர்.
அப்பர் அச்சகத்திறப்பு அருமையாய் முடிந்தது. ஆனால் அடுத்து வந்தது என்ன?
அச்சகம் இருந்த இடம், தாள் வணிகர் ‘அசலணிமக்கள்' என்னும் நிறுவனத்தார்க்கு உரிமையானது. அவர்கள் நீதி மன்றத்தின் வழியே முயன்று அந்தக் கட்டத்தைத் தம்மிடம் ஒப்பிக்கும்படி கட்டளை பெற்றிருந்தனர். ஆனால் உடனே