150
இளங்குமரனார் தமிழ்வளம் - 27
கட்டங்களின் மேலாண்மைப் பொறுப்பு உயர்நீதிமன்ற ஆட்சியின் கீழுள்ள அறநிலையப் பொறுப்பு அலுவலடம் (Official Trustee) இருந்தது. அந்நாளில் இரண்டாம் உலகப் போர் முடிந்தும் அதன் நெருக்கடி நீங்கா நிலைமை இருந்தது. அரசு அலுவலகங் களுகேகேநிரம்பக் கட்டங்கள் வேண்டியிருந்தன. ஆகலின் அரசின் இசைவு இன்றி எக் கட்டத்தையும் எவரும் எவருக்கும் வாடகைக்குக் கொடுக்க இயலாது. எக் கட்டத்தையும் அரசு தனக்கெனக் குறிப்பிட்ட வாடகைக்கு எடுத்துக்கொள்ள உரிமை உடையதாக இருந்தது. அதற்கென வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டமும் கொண்டு வரப்பெற்று நீதிமன்றங்களும் அமைக்கப் பெற்றிருந்தன.
பின்னர், முதல்வர் ஓமந்தூரர் பதவி விலகித் திரு குமாரசாமிராசா அவர்கள் முதல்வராக இருந்தார். அவரும் கழகத்தை நன்கறிந்தவர். அதன் தமிழ்ப்பணியைப் போற்றுபவர். வ.சு. அவர்களின் பெருந்தொண்டை மதிப்பவர். ஆகலின், அரசு அக் கட்டத்தைத் தனக்கு எடுத்துக் கொள்ளாமல் கழகத் திற்குத் தர இசைந்தது. அவ்விசைவாணையைக் கொண்ட வ.சு. அவர்கள் அக் கட்டத்தைப் பொறுவதற்கு முயன்றார்.
அக் கட்டட அலுவல் பொறுப்பாளராக இருந்தவர் திரு. வேங்கடராமநாயுடு என்பார். அவர், பள்ளிவாசல் உறுப்பினர்கள் கழகத்திற்கு இக் கட்டத்தைத் தருதற்கு இசையவில்லை என்று மறுத்தார். 'கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதை' யாகி விடுமோ என்னும் நிலையில் அந்நாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் டாக்டர் சுப்ராயன் அவர்கள் உதவி வாய்த்தது.
டாக்டர் சுப்பராயன் அவர்கள் கழக நற்பணிக்கு இக் கட்டடம் இருக்க வேண்டுவதே என்பதை உணர்ந்து அந்நாள் மாநில உள்ளாட்சித் தலைமைச் செயலாளர் திரு. புல்லாரெட்டி அவர்களுக்குப் பரிந்துரைத்தார். திரு. புல்லாரெட்டியும் திரு. வேங்கடராமநாயுடுவும் உடன் பயின்றவர்களாதலோடு பணி ஒன்றிப்பும் உடையவர்கள். ஆகலின் அப் பரிந்துரை நற்பயன் அளிப்பதாயிற்று. இவ் வகையில் திரு. குமாரசாமிராசா அவர் களும், டாக்டர் சுப்பராயன் அவர்களும் கழகத்திற்குச் செய்த உதவி காலத்தாற் செய்த பெருமைக்குரியதாகும். இதனால், ஆனந்த விகடன் நிறுவனத்தார் தந்த வாடகைத் தொகை ரூ. 345. ஐயே கழகம் தருமாறு ஒப்பந்தம் உண்டாகியது. இப்பொழுது உள்ள அச்சகப் பகுதியும், விற்பனை நிலையப் பகுதியுமாக இருக்கும் கட்டங்களே அவை என்பதை நினைக்கும்போது