152
இள
இளங்குமரனார் தமிழ்வளம் - 27
கழக நூல் வெளியீட்டு வளர்ச்சி குறித்து அவ் விழாவில் வரவேற்புரையாற்றிய அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் குறிப்பிட்ட கருத்துகள் கருதத்தக்கன.
"தொடக்கத்தில் கழகமானது பெரும்பாலும் சமயச் சார்புடைய நூல்களையே வெளியிட்டுக் கொண்டிருந்தது. நாளடைவில் இலக்கிய நூல்களின் எண் மிகுந்தது. சங்ககால இலக்கியங்களைப் பற்றிய அறிவு மக்களிடம் பரவுதற்கு முதல் நூல்களை மட்டும் வெளியிட்டால் போதாது. முதல் நூல்களைத் தாமாகவே படித்துப் பொருள் தெரிந்துகொள்ளக்கூடிய அளவு தமிழறிவு படைத்த மக்கள் நம் நாட்டில்மிகச் சிலரே உளர். நம்முடைய பள்ளிகளில் தமிழ் இலக்கியங்களை இப்பொழுது சில நாட்களுக்கு முன்வரை மிகுதியாகக் கற்பிக்காததாலும், தமிழ் இலக்கியங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய அளவு தமிழறிவு உள்ள மக்கள் பெரும்பாலும் நாட்டில் இல்லாமை யாலும் தமிழ் இலக்கியங்களைப் பற்றிய அறிவு தமிழ் மக்களிடையே வளர்வதற்காகச் சிந்தாமணி வசனம், பெரியபுராண வசனம், திருவிளையாடல் வசனம் முதலிய வசன நூல்கள்இக் கழகத்தால் வெளியிடப்பெற்றன. சிலப்பதிகாரச் சுருக்கம், சிந்தாமணிச் சுருக்கம், பெருங்கதைச் சுருக்கம் முதலிய நூல்களை விளக்கக் குறிப்புரையுடன் கழகம் வெளியிட்டது. சங்க கால நூல்களுக்கும் பிற்கால நூல்களுக்கும் தகுந்த புலவர்களைக் கொண்டு உரை இயற்றுவித்து அந்நூல்கள் வெளியிடப்பெற்றன.
"சங்க நூல்களை ஆய்ந்து அவைகளினின்றும் விளங்கும் பொருள்களைக் கொண்டு ஆய்வு நூல்கள் வெளிப்பட்டன. திருக்குறள் முதலிய நூல்களின் பெருமைகளை விளக்ககூடிய ஆராய்ச்சி நூல்கள் பல வெளியிடப்பெற்றிருக்கின்றன. இப் பணிகள் எல்லாம் செவ்வையாக நிறைவேறுதற்காக இக் கழகம் தொடக்கத்தில் இருந்தே தமிழில் புலமைகொண்ட தமிழ்மக்க்ள அனைவருடனும் நெருங்கிய தொடர்புகொண்டு அவர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்துகொடுத்து அவர்களால் கிடைக்க கூடிய பயன்களைப் பெற்றுத் தமிழ் உலகுக்கு வழங்கியிருக் கின்றது"
பள்ளி மாமணவர்களுக்குச் செந்தமிழ் உணர்ச்சியைச் சிறப்பாக ஊட்டும் முறையில் கழகம் பல தமிழ்ப்பாட நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறது. கல்வித்துறையில் பதவி வகித்திருந்த அறிஞர்கள் பலர் இப் பணியில் கழகத்துககு மிகவும் ஊக்கமும், உதவியும் தந்திருக்கிறார்கள். இவ்வாறே மொழிபெயர்ப்பு