உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கழக ஆட்சியர் வ.சு.வரலாறு

155

அறிந்த கடனுணர்ந்த பெருமக்களின் அன்பார்ந்த ஒத்துழைப் பாலும் கழகப் பாடநூல்கள் பாடமாக வைக்கப்பெற்று வந்தன.

"சுப்பையாபிள்ளை உம் தொண்டை அறிவோம். நீர் செய்துவரும் உயர்ந்த பணிக்குரிய பொழுதை விடுத்து, இப் பாடப் புத்தகத்தைப் பாடமாக வைத்தற்காக வரவேண்டுமா? இதனைச் செய்ய வேண்டியது எங்கள் கடமை அல்லவோ? மீண்டும் இப்படி உம் பொழுதை வீண்படுத்த வேண்டியது இல்லை," என்று உரிமையால் கடிந்துபேசி உள்ளன்போடு உதவியவர்களையெல்லாம், இன்று நி னைத்து நன்றிப்

பெருக்கால் உருகும் காட்சியை வ.சு. அவர்களிடம் நெருங்கிப் பழகுவோர் அனைவரும் அறிவர்.

இத்தகைய நல்லெண்ணம் படைத்தவர்கள் உதவியாலே தான் கழகம் வளர்ந்தது. அரிய நூல்களையெல்லாம் வெளியிடும் பேற்றைப் பெற்றது. ஆனால், பாடநூல்களையெல்லாம் அரசே வெளியிட வேண்டும் என்னும் திட்டம் பதிப்புத் துறையை ஆட்டங்காண வைத்துவிட்டது மட்டுமன்றி, வேரைப் பறிக்கும் அளவுக்கும் போய்விட்டது என்று அவர்கள் இப்பொழுதும் கூறுவதில் உள்ள உண்மை அவர்கள் பட்டறிவால் கண்ட மெய்மையேயாம்.

வளந்தந்த பாடநூல் வெளியீடு பறிபோனால் இனி என்ன செய்வது? அவ் வருவாயைக் கருதித் தொடங்கிவிட்ட அற நிறுவனங்களைத் தொடர்ந்து நடத்துவது எப்படி? புதிய நூல்களை வெளிக்கொணர்வது எப்படி? இப்படி அடுக்கடுக்காகச் சிக்கல்கள் கிளைத்தன. சிக்கல்கள் வரும்போது இயன்ற அளவும் முயன்று அவிழ்த்துத் தீர வழி கண்டாக வேண்டுமே! அவ் வழியில் துணிந்தார் திரு.வ.சு.

1960 இல் மதுரையில் திரு.மி. சண்முகம் என்பார் கழக நூல்களை விற்பதற்கு ஒரு நிலையம் தொடங்க விழைந்தார். அவர் விழைவை ஏற்றுக்கொண்டு திரு.வ.சு. அவர்கள் சைவ சித்தாந்தப்புத்தக நிலையத் தொடங்க இசைவு தந்தனர். தாமும் நேரில் வந்து நிலையத்தைத் திறந்து வைத்துச் சிறப்பித்தனர். ஆனால், அந்நிலையச் செயற்பாட்டில் நிறைவு உண்டாகவில்லை. ஆகவே புத்தகம் வழங்குதலை நிறுத்திக்கொள்ள நேரிட்டது

இப்பட்டறிவு கட்டாயம் பெருநகரங்களில் எல்லாம் கழக நூல் விற்பனை நிலையங்களைத் தோற்றுவித்தல் வேண்டும் என்னும் ஆர்வத்தைத் தூண்டிற்று. அவற்றைக் கழகமே தொடங்கி