உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




23. புதுவழி புதுக்குநர்

("வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்னும் வழக்குக்கு இழுக்கும் உண்டோ)

தாயுமானவர்

திரு.வ.சு. பலதிறப் புதுவழி புதுக்கிய புகழாளர் ஆவர். அவற்றுள் இவண் உரைக்கப்பெறுவது சொற்பொழிவு நூல்கள் வெளியீடு பற்றியதேயாகும்.

'பிரசங்கமும்' 'உபந்யாசமும்' நாட்டில் நிகழ்ந்து கொண்டிருந்த நாளிலே சொற்பொழிவு நிகழ வழி செய்தார் வ.சு. அதிலும் அச் சொற்பொழிவுகளை அச் சொற்பொழிவாற்றும் மேடையிலேயே நூல் வடிவில் வழங்கவும் வழி செய்தார். அவ் வகையில் தமிழ் ஒரு புதுத்துறையில் வளம் பெற்றுப் பொலிவ தாயிற்று.

நெல்லையில் திரு. பால்வண்ண முதலியார் என்பார் ஒருவர் இருந்தார். அவர் இயற்றிய நூல் 'சொற்பொழிவு ஆற்றுப்படை' என்பது. திரு. வி.க. அவர்களின் தலைமையுரைகள் 'தமிழ்த் தென்றல் அல்லது தலைமைப் பொழிவு" என்னும் பெயரால் நூல் வடிவு கொண்டன. டாக்டர்.வ. சுப. மாணிக்கனார் இயற்றிய வள்ளுவம் பன்னிரு சொற்பொழிவுகளைத் தாங்கிய அரிய ஆய்வு நூலாகும்.

"இவை யாண்டும் யார் முன்னும் பேசப்பட்டனவல்ல. யானே திருவள்ளுவரை முன்வைத்துப் பேசினாற்போல் எழுதிய கற்பனைச் சொற்பொழிவுகள். இஃதோர் இலக்கியப் புதுநெறி' என்று வள்ளுவ நூலாசிரியர் வரைவது இவண் நோக்கத் தக்கதாகும்.

'பாம்பறியும் பாம்பின கால்' என்பதுபோல் இலக்கியப் புது நெறி கண்ட அவர் திரு.வ.சு அவர்கள் நடாத்திவரும்