160
இளங்குமரனார் தமிழ்வளம் - 27 ஓ
1939 இல் சென்னை, சிந்தாதிரிப்பேட்டை உயர்பள்ளியில் தமிழ்த் தென்றல் திரு.வி. கலியாணசுந்தரனார் தலைமையில் பத்துப் பாட்டு மாநாடு நடைபெற்றது. அம் மாநாட்டில் ஆண்பாற் புலவர் ஐவரும் பெண்பாற்புலவர் ஐவருமாகப் பதின்மர் பத்துப் பாட்டுக்களையும் பற்றிச் சிறப்புரை யாற்றினர்.
கேட்டவர் கிளர்ந்தனர். கேளாரும் வேட்டனர்; அக்
கூட்டத்திற்குத் திரு.வ.சு. அவர்களும் சென்றிருந்தார். சொற் பொழிவின் நயமும் கருத்து வளமும் அவர்களைக் கவர்ந்தன. ஆகலின் ஏனையரைப்போல் நன்றாக இருக்கிறது என்ற அளவில் நிற்படாமல் இவ்வரிய சொற்பொழிவுகளை எழுத்துருவில் வடித்துத் தந்தால் எத்துணைப் பயனாம்? ஏற்பாடு செய்தவர்க்கும் ஏற்றுக்கொண்டவர்க்கும் எத்தகைய நிலைபேறாம்? பின்வரும் கால்வழியினருக்கும் பெரும்பயன் அன்றோ என்று எண்ணினர். அதனை நிறைவேற்றுதற்கு அவாவினர்.
எ
அச் சொற்பொழிவில் பங்கு கொண்ட புலவர்களைப் பல்கால் அணுகி எழுத்து வடிவில் அப் பொழிவை ஆக்கித் தருமாறு வேண்டினர். வேண்டியும், அம் முயற்சி பயனின்றி ஒழிந்தது. ஆனால், அப் பட்டறிவு வாளா ஒழிந்துவிடவில்லை. புதுநெறி புதுக்கத் தூண்டியது. 'பலரைத் தூண்டித் துலக்கிய தோன்றல் வ.சு. அவரைத் தூண்டித் துலக்கியது இச் சிந்தாதிரிப் பேட்டை பத்துப்பாட்டு நிகழ்ச்சி.
கழக வழியாக இலக்கிய மாநாடுகளைக் கூட்டுவது என்றும், மாநட்டுக்கு முன்னரே தலைவர் உரை, சொற்பொழிவாளர்களின் ரைகள் ஆகிய அனைத்தையும் எழுதிப் பெற்று அச்சிட்டு மாநாட்டுப் பேரவையிலேயே நூலை வெளியிடுவது என்றும் திரு.வ.சு. முடிவெடுத்தார்.
இத்திட்டத்தின் நோக்கமும் பயனும் குறித்து ஒரு நீண்ட கண்ணோட்டம் செலுத்தினார் வ.சு. இத்தகைய மாநாடுகள் தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ்ப் பெருநூல்கள் இறந்துபடாமல் சிறந்து நிலவுதற்கும், தமிழ்ப் பெரும் புலவர்களைத் தமிழ்ப் பெருமக்களுக்கு அறிவுறுத்துதற்கும், தமிழ் நூற்றொகைகள் ஓரிடத்து ஒருங்கு வெளிப்படுதற்கும், பண்டைப் பெரும்புலவர் களின் பேராற்றலும் பேருதவியும் நன்கு வெளிப்பட்டு அவர்களை நன்றி மறவாது போற்றுதற்கும் அவர்தம் அடிச்சுவடு பற்றி இஞ்ஞான்றைப் பெரும் புலவர்கள் புத்தம் புதிய பெருநூலாக்கித் தமிழ்த்தாயினுக்குப் புத்தணி புனைதற்கும் துணைபுரியும்” எனத்