B
கழக ஆட்சியர் வ.சு.வரலாறு
167
காட்சியில் இடம்பெற்றிருந்தன. விழாவிற்கு வருகை தந்திருந்த அனைவரும் காட்சியைக் கண்டு வியந்தனர். கழிபேருவகையுடன் பாராட்டினர். அதற்கு முன் அத்தகைய அருங்கலைச் செல்வத் தொகுப்பை அறிஞர் பெருமக்கள் கண்டதிலர். ஆகலின் அத் தொகுப்பின் அருமையை நெஞ்சாரப் போற்றினர். வ.சு. அவர்களை வாழ்த்தினர்.
தமிழக ஆளுநர் மாண்பமை சர்தார் உச்சல்சிங் அவர்கள் திருவள்ளுவர் விழாவைத் தொடங்கி வைத்தார். முதல்நாள் விழாவிற்குச் சட்ட அமைச்சர் திருமிகு செ. மாதவன் அவர்கள் தலைமையேற்றார். பொதுப்பணி அமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் திருக்குறள் நூற்காட்சியைத் திறந்து வைத்துத் திருக்குறள் கட்டுரைப்போட்டி, புத்துரைப்போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு வழங்கினார்.
தவத்திரு. சுத்தானந்த பாரதியார் அவர்கள் திருக்குறள் போலவே ஈரடியால் ஆங்கிலத்தில் யாத்த திருக்குறள் மொழி பெயர்ப்பு நூலைத் தமிழ்நாடு காங்கிரசுத்தலைவர் திரு. சி. சுப்பிரமணியம் வெளியிட்டார். இரண்டாம் நாள் விழாவுக்குத் தமிழகக் கல்வியமைச்சர் திரு. இரா. நெடுஞ்செழியன் தலைமை ஏற்றார். முன்னாள் தமிழக முதல்வர் திரு.எம். பக்தவத்சலம் திருவள்ளுவர் திருநாள் மலரை வெளியிட்டார்.
விழாவின் தொடக்கத்தில் திருநாட்கழகப்பொறுப்பாளர் திரு. வ.சு.கழகம் தோன்றிய வகை, அது செய்தவரும் வள்ளுவப் பணிகள் ஆகியன குறித்து விரித்துரைத்து வரவேற்றார். இறுதியில் நன்றியுரையும் வழங்கினார்.
நாடகத்தமிழுக்கு இணையற்ற தொண்டுசெய்த ஏந்தல் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை, தமிழின் மூலங்காட்டி உண்மை உணர்த்தியவர் ஆவர். ஆராய்ச்சித்துறையிலும் மெய்ப்பொருள் துறையிலும் சீரிய தொண்டாற்றியவர். அவர்தம் பெருவிழாக் கொண்டாடி, நினைவுமலர் வெளியிடுதல் கடனெனத் தமிழ் மக்கள் சார்பில் திரு. வ. சு. நினைத்தார். அந் நினைவு பெருவிழா வாயிற்று.
29-10-57 இல் சென்னை இராசாசி மண்டபத்தில் பேராசிரியர் நினைவுவிழா நடைபெற்றது. சென்னை மாநில முதல்வர் திரு. காமராசர் தலைமை தாங்கினார். கல்வியமைச்சர் திரு.சி. சுப்பிரமணியம் மணங்கமழும் மலரை வெளியிட்டுச் சிறப்புரை