கழக ஆட்சியர் வ.சு.வரலாறு
·
169
நிலையமாகும். மறைமலையடிகளார் தம் ஆராய்ச்சிக்கெனத் தேர்ந்து தெளிந்து தொகுத்த நூல்களுடன் கழகம், தொலை நோக்குடன் தொகுத்து வைத்த அரிய நூல்களையும், கொண்டு திகழ்கின்றது. இந் நூலகத் தொடக்கவிழா 24-8-58 ஆம் நாள் சென்னை மாநில ஆளுநர் திரு. விட்ணுராம் மேதி அவர்கள் தலைமையில் நடந்தது. அமைச்சர் திரு. பக்தவத்சலம் நூல் நிலையத்தைத் திறந்து வைத்தார். நூலக நுண்கலைச் செல்வர் பேராசிரியர் டாக்டர் அரங்கநாதன் அவர்கள் நூலகப்பணி குறித்து அரும்பேருரை ஆற்றினர். அன்று மாலையில் சைவப்பெரியார் திரு. சச்சிதானந்தம் பிள்ளை தலைமையில் மறைமலையடிகளார், கா.சு. பிள்ளை, சோமசுந்தர நாயகர், பேராசிரியர் சுந்தரம்பிள்ளை, திருவரங்கனார் ஆகியோர் திருவுருவப்படங்கள் திறந்து வைக்கப்பெற்றன விழாவின் இறுதியில் பேரறிஞர்அண்ணா அவர்கள் கலந்து கொண்டு கொட்டும் மழையின் இடையே வெள்ளமெனத் திரண்ட மக்கள் கேட்டு உவப்புற ஆற்றிய உரை மறக்க ஒண்ணாததாம்.
வ.சு. அவர்கள், விழாவின் இறுதியில் நன்றியுரைத்து நயம்பட மொழிந்தனர். திருவுருவப்படங்களில் அமைந்திருக்கும் பெரு மக்கள் ஐவருக்கும் உரிய அணுக்கத் தொடர்புகளை அருமையாக எடுத்துரைத்தனர்.
தவத்திரு, மறைமலையடிகளார் பல்லாவரத்தில் வாழ்ந்த திருமனையை அவர்கள் நினைவுச்சின்னமாக்க விரும்பினர். அதற்கு ஆகும் முயற்சிகளில் ஊன்றினர். நடுவணரசு, தமிழக அரசு, கழக நிறுவனம் ஆகியவற்றின் பொருளுதவியால் 'மறைமலையடிகள் கலைமன்றம்' என்னும் பெயரில் நினைவு நிலையம் ஆக்கினர்.
கலைமன்றத்திறப்புவிழா 12-7-62 இல் மதுரை திருஞான சம்பந்தர் மடத்துத் தலைவர் அருட்டிரு சோமசுந்தர ஞானசம்பந்த அடிகளார் தலைமையில் சிறப்புற நடைபெற்றது. கலைமன்றம் அமைந்த வகையினைத் திரு.வ.சு. விளக்கியுரைத்து வரவேற்றார். மாளிகை கலைமன்றமாக உருவாகியவகையை எடுத்துரைத்து, "இம் மாளிகையைச் சிறந்த கலைக் கூடமாக்கியும், சைவசித்தாந்த வகுப்பு, திருக்குறள் வகுப்பு, தேவார திருவாசக இசைவகுப்புகள், இசை, நாடகம் பற்றிய ஆராய்ச்சிகள் முதலியன நடக்கும் ஆராய்ச்சிக் கூடமாகவும்