உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




B கழக ஆட்சியர் வ.சு.வரலாறு

175

உயர்நீதிமன்ற நடுவர் திரு. மோகன் தொடக்கவுரை யாற்றினார். விழா ஏற்பாடு செய்த வ. சு. அவர்களை, "நான் மறைமலையடிகளாரைப் பின்பற்றுகிறேன் என்று சுப்பையா பிள்ளை அவர்கள் என்னிடம் சொன்னார்கள். அவர்கள் பின்பற்றத்தான் வேண்டும். அவர்கட்கு இப்போது 80 வயத நடக்கிறது. 80 வயது இளைஞராகிய அவர்கள் நூறாண்டு வாழ வேண்டும். ஏனென்றால் மறைமலையடிகளைப் போன்ற தலைவர்கள், அவருடைய உயர்ந்தகருத்துக்களைக் கொண்டவர்கள், நம் நாட்டிலே அடிகளாருடைய கருத்துமூலமாக நடமாடு கின்றார்கள் என்றால், அதற்குக் காரணம் தாமரைச் செல்வர் அவர்கள் செய்த சீரிய பணிதான் என்று சொல்வேன்" என்றார். பின்னே பேரறிஞர்கள் ஐவர் சீருரையாற்றினர். கவின்மிக்க நூற்றாண்டு விழா மலரைக் கல்வித் துறைச் துறைச் செயலர் திரு. அரங்கபாசியம் அவர்கள் வெளியிட்டார்கள். தவத்திரு அழகரடிகள், திரு. மறை திருநாவுக்கரசு, திரு. ந. ரா. முருகவேள், திரு. கோவை இளஞ்சேரன், திரு. சிறுவை நச்சினார்க்கினியன் ஆகிய மறைமலையடிகளாரின் தொண்டர் ஐவரைப் பாராட்டிப் பொன்னாடை போர்த்தினார் தவத்திரு. குன்றக்குடியடிகளார்.

செல்வியின் பொன்விழா 29-1-77 இல் நிகழ்ந்தது. தில்லிப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவர் டாக்டர் சாலை இளந்திரையன் வரவேற்புரைத்தார். "இவ் விழா மூன்று நல்லோர்கள் பணிக்குப் பொன்விழா என்றுதான் நான் கருதுகிறேன். ஒருவர் பவளவிழாக் கண்டுவிட்ட தாமரைச் செல்வர் பெரியவர் சுப்பையாபிள்ளை அவர்கள். இன்னொருவர் என்னுடைய அன்புக்கும் நன்மதிப்புக்கும் உரிய நண்பர் கழகத்துப் பொது மேலாளர் திரு. கலியாணசுந்தரம் அவர்கள். இன் னொருவர் என்னுடைய அன்புத் தம்பி இந்த நாட்டிலே எந்தப் பணி ஆழமாக அமைதியாகத் திட்டமிட்டுச் செய்யவேண்டு மென்று நான் கருதுகிறேனோ அப் பணியிலே தனிச் சிற்பபுப் பெற்றிருப்பவராகிய திரு. முத்துக்குமாரசாமி அவர்கள்” என்று செல்வியின் பொன்விழாக் காணச் சீர்மையாய் உழைத்துவரும் மும்மணிகளைப்பாராட்டி விழா மணிகளை வரவேற்றார். முத்தமிழ்க்காவலர் திரு. கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்கள் தொடக்க வுரையாற்றினார். சிலம்புச்செல்வர் திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் தலைமை ஏற்றார்கள். "இந்த விழா தாமரைத்திரு. சுப்பையாபிள்ளை அவர்களுக்குத் தமிழ்ப்