178
இளங்குமரனார் தமிழ்வளம் - 27
ஒரு மலர் வெளியிடவேண்டும் என்றால்அதற்குப் பன்னூறு பேர்களிடம் கடிதத்தொடர்பு கொள்ளவேண்டும். நினைவூட்டல் கடிதமும் எழுதவேண்டும் அவ்வாறே விழாக்களில் தலைமை ஏற்கவும் உரையாற்றவும் தக்காரைப் பன்முறை எழுதியும் நேரில்சென்றும் தொடர்புகொண்டு கடனாற்ற வேண்டும். ஒரு விழா நிகழ்ச்சி ஏற்பாட்டின்போதே மற்றொரு விழாவுக்கு - மாநாட்டிற்கு கூட்டத்திற்கு - மலருக்கு ஏற்பாடும் நடந்து கொண்டே இருக்க வேண்டும்! அம்மம்ம! இவற்றைக் கழக ஆட்சியாளர் தம்அகவை முதிர்விலும் எப்படிச் செய்து முடிக் கின்றார் என்றால், இவரால் இவ்வாறு செய்யாமல் இருக்க முடியாது என்பதே மறுமொழியாகும். மற்றும் தொட்டவை யெல்லாம் துலங்கச்செய்தலில் வல்ல வ.சு அவர்களின் பார்வையில் பட்டவர்கள் எல்லாம் பாராட்டும் பணி செய்யப் பழக்கப்பட்டவர்கள்; வெற்றிகள் அமைந்து கிடக்கும் 'மையம்'
இது