180
இளங்குமரனார் தமிழ்வளம் - 27
திருவரங்கனார் ஈழத்தில் இருந்த காலையில் அங்கிருந்த விவேகானந்தர் கழகத்தில் பெரும் பங்குகொண்டு தொண்டா ற்றினார். அந்நாளில் தவத்திரு விவேகானந்தர். இராகிருட்டிணர், அபேதானந்தர் ஆகியவர்களின் திருவுருவப்படங்களில் பலவற்றை வாங்கிப் பாளையங்கோட்டையில் உள்ள வீட்டின் மாடியில் மாட்டி இருந்தனர். பின்னர் மறைமலையடிகளார் தொடர்பு உண்டாகவே, அவர்தம் பலநிலைத் திருவுருவப்படங்களையும் அவர்தம் ஆசிரியர் சைவசித்தாந்த சண்டமாருத சோமசுந்தர நாயகர் திருவுருவப்படத்தையும் வரவழைத்து அழ அமைத்தனர். கழகம் தோன்றிய பின்னர்த் திருநெல்வேலிக் கழகத் தலைமை நிலையத்தில் ஓவியர் நெல்லையா அவர்களைக் கொண்டு மெய்கதேவர், அருணந்திசிவம், மறைஞானசம்பந்தர், உமாபதிக்கு ஆகிய சந்தானகுரவர் நால்வர் திருவுருவப் படங்களை திருவள்ளுவர், அப்பரடிகள், திலகவதியார், தண்டபாணி அடிகள், சிவஞானமுனிவர், குமரகுருபர அடிகள் ஆகியோர் திருவுருவப் படங்களையும் பெரிதாக எழுதச் செய்தார்.
சென்னைப் பெத்துநாய்க்கன்பேட்டை காசிவிசுவநாதர் கோயிலில் எழுந்தருளியுள்ள கூத்தப்பிரான், சிவகாமியம்மை, மணிவாசகர் எழிலுருவங்களைச் சித்த மருத்துவப் பெரும்புலவரும், மறைமலையடிகள்பால் மட்டற்ற அன்பருமாகிய திரு. ஆனந்தம் அவர்கள் படம் பிடித்து வைத்திருந்தனர். அதனைக் கழக அமைச்சர் அரங்கனார் சிறிதும் பெரிதுமாகப் படங்கள் எடுத்து மூவண்ணந்திகழ ஓவியமாய் இதழ்களில் வெளியிட்டும், படமாக விற்றும் பரப்பினர். அவ்வாறே திருமயிலைத்திருவள்ளுவர் திருக்கோயிலில் காணும் திருவள்ளுவர் திருவுருவை நெல்லை ஓவியர் நெல்லையா அவர்களைக்கொண்டு அழகொழுக எழுதிப் படமாக்கிப் பரப்பினார். இவையெல்லாம் படந்தொகுத் தலில் திரு. வ. சு. அவர்களுக்குக் கிடைத்த முன்னோடி வாய்ப்பும், உடன் இருந்து செய்யும் வாய்ப்பும் ஆம்.
1938 ஆம் ஆண்டில் மூர் அங்காடியில் உள்ள பழைய புத்கக் கடை ஒன்றில் ‘சரசாங்கி' என்னும் நாடக நூல் ஒன்று வ. சு. அவர்களுக்குக் கிடைத்தது. சேக்சுபியரின் 'சிம்பலின்' என்னும் நாடகத்தைத் தழுவிய அந்நூல், திருவள்ளுர் இராம சலசலோசனச் செட்டியார் அவர்களால் இயற்றப்பெற்றது. பெரும் புலவர்கள் பலரின் சாற்றுக்கவிகளுடன் கண்டஅந் நூலின் சிறப்பறிந்து நாடகப்பேராசிரியர் பம்மல் சம்பந்த முதலியார் அவர்களைக் கண்டு திரு.சலசலோசனச் செட்டியார்