உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




8

கழக ஆட்சியர் வ.சு.வரலாறு

185

ஏழு தொகுதிகளைப் படங்களுடன் வெளியிட்ட தர்ஃச்டன் அவர்கள் படத்தைச் சென்னை அரும்பொருட் காட்சிக் கையேடு (Museum Hand Book) என்ற நூலில் இருந்தும், திருக்குறளையும், கைவல்ய நவநீதம் என்னும் நூலையும் இலத்துன்மொழியிலும் செருமன் மொழியிலும் மொழி பெயர்த்த டாக்டர் கிரால் படத்தைத் தரங்கை மிசியோன் சரித்திரம் என்ற நூலில் இருந்தும், ஆங்கிலத்தில் உள்ள (Human Anatomy) யை மனுஷவங்காதி பாதம் என்று தான்யேல் சாப்மென் என்பவர் தமிழில் மொழிபெயர்த்ததையும், (Surbery)யை இரண வைத்தியம் என்று சொசுவா டன்வர்த் என்பவர் தமிழில் மொழி பெயர்த்ததையும் (Hoopers Physician's Vademeeum) என்ற நூலை வைத்திய சாகரம் என்ற வில்லியம் பவுல் என்பவர் மொழிபெயர்த்ததையும் செப்பஞ்செய்து விளக்கப்படங்களுடன் வெளியிட்ட டாக்டர் கிறீன் அவர்கள் படத்தை இலங்கைத் தமிழ் விழா மலரில் இருந்தும், தமிழ் இலத்தீன் இலக்கணத்தையும், தமிழ் இலத்தீன் அகராதியையும் வெளியிட்ட சீகன்பால்க் அவர்கள் படத்தைத் தரங்கம்பாடி மிசியோன் சரித்திர நூலில் இருந்தும் சென்னைப் பல்கலைக்ழகப் பேரகராதியை உருவாக்க முதல் ஆசிரியராக அமர்த்தப்பெற்ற சே. எச்.சாண்டலர் படத்தை அன்பர் ஒருவரிடமிருந்தும், 'The Dravidian Element In Indian Culture' என்னும் நூலை எழுதிய கில்பர்ட் சிலேட்டர் படத்தைச் சென்னைப் பல்கலைக் கழகத்தில் இருந்தும், தவத்திரு ஈராசு பாதிரியார், பாப்லிதுரை ஆகியவர்கள் படங்களை அவர் களிடமே கேட்டுப்பெற்றும் தொகுத்தனர். அவற்றைப் பெரிய படமாக எழுதியும் நிழற் படமாக எடுத்தும் காட்சியில் வைத்தனர்.

இத் தமிழ் அறிஞர்களின் படங்களைத் தேடித் தொகுப் பதற்கு எத்துணை விடாப்பிடியான முயற்சி, எத்துணை நேரப் போக்கு, எத்துணைப் பொருட் செலவு வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் எண்ணிப் பார்த்தல் வேண்டும். அவ்வாறு எண்ணிப் பார்க்கும் மனம் கழக ஆட்சியாளர் ஆர்வத்தையும், செயல் திறத்தையும், அயரா உழைப்பையும் அவரைச் சார்ந்தோர் சீர்மையையும் தெள்ளிதின் உணரும்.

ஆட்சியாளர் அவர்கள் திருக்குறளில் முதல் 13 அதிகாரங் களை ஆங்கிலத்திலேர மொழிபெயர்த்த எல்லிசு, தமிழ் இலக்கணத்தை ஆங்கிலத்தில் எழுதிய இரேனியசு, தமிழ் ஆங்கில அகராதி எழுதிய ராட்லர், நீதிநெறி விளக்கத்தை ஆங்கிலத்தில் பெயர்த்த எச். ஃடோக்சு, வெற்றிவேற்கயைனைப்