உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கழக ஆட்சியர் வ.சு.வரலாறு

187

'இந்தியாவின் அடிமைத் தளையினை நீக்கி உரிமை வாங்கிக் கொடுத்துப் பெரும் புகழோடு மறைந்த காந்தியடிகள், விடுதலைக்குழைத்து விடுதலை பெற்ற பின் இந்திய முதலமைச்சராக 17 ஆண்டுகள் புகழ்பெற ஆட்சி செய்து மறைந்த பண்டியத சவகர்லால் நேரு, தமிழ்மொழிக் கேற்பட்ட தீங்கினை நீக்கவும், தமிழ்மக்கள் முன்னேற்றத்திற்குத் திட்டங்கள் வகுக்கவும் முயன்று தமிழக அரசைக் கைப்பற்றி அதன் முதலமைச்சராக இரண்டாண்டுக் காலம் வீற்றிருந்து புகழோடு மறைந்த சி.என். அண்ணாதுரை ஆகிய மூவரும் பிரிந்தவுடன் உலகப் பெருமக்களும், அரசியல் தலைவர்களும், தமிழ்ப் புலவர்களும் வரைந்தனுப்பிய இரங்கலுரை இரங்கப் பாக்களைத் தொகுத்து முறையே உரிமையின் பரிசு, உலகப் பேரொளி, தமிழ்ப் பேரொளி என்ற தலைப்புக்களில் வெளியிடப் பெற்ற மூன்று நூல்களும் படம் தொகுப்பதற்குச் சிறந்த வாயில் களாக அமைந்துள்ளன.

மறைமலையடிகள் நினைவு விழாக்களும், நூல் வெளியீட்டு விழாக்களும், கழகக் கட்டிடத் திறப்பு விழாக்களும், தமிழ்ப் பெரும் புலவர் விழாக்களும் இவை போன்ற பிற விழாக்களும் படத்தொகுப்பதற்கு வாயில்களாக அமைந்துள்ளன.

மறைமலையடிகள் நூல்நிலையமும், சிவஞானமுனிவர் நூல் நிலையமும், மறைமலையடிகள் கலைமன்றமும், குமரகுருபரர் குழந்தை வளர்ப்புப் பள்ளியும், திருவள்ளுவர் புலவர் கல்லூரியும் படத் தொகுப்பதற்கும் காப்பதற்கும் வாயில்களாக அமைந்துள்ளன.

“கழகம் இதுகாறும் வெளியிட்டுள்ள பலதுறை நூல்களும் படந் தொகுப்பதற்கு வாயில்களாக அமைந்தன. என மூத்த மருகரும் கழகப் பொது மேலாளருமான திரு. இரா. கலியாண சுந்தரம் (பி.எஸ்ஸி), என் இளைய மருகரும்மறைமலையடிகள் நூல்நிலையத்தின் நூலகருமான திரு. இரா. முத்துக்குமாரசாமி (எம்.ஏ., பி.லிப்), என் நெருங்கிய உறவினரும் மகனாரும் ரிசர்வ் பாங்கு அலுவலருமான திரு. அ. சண்முகம் (பி.எஸ்ஸி) ஆகிய மூவரும் படப்பிடிப்புத் திறனைக் கைவரப்பெற்றவர்களாக அமைந்துள்ளனர்.

திரு. வ. சு. அவர்கள், ஒரு படத்திற்காக எப்பாடு பட்டு விடாப்பிடியாக நின்று எய்தப் பெறுவார்களோ, அவ்வளவு முயற்சியும் ஆர்வமும் நூல்களைத்தொகுத்தல், புலவர் கடிதங் களைத் தொகுத்தல் ஆகியவற்றிலும் செலுத்துவர். அறிஞர்