ஓ கழக ஆட்சியர் வ.சு.வரலாறு
ஓ
189
வி. சங்கர நாராயண பிள்ளை நூலகம், திருவாளர் நடேச சாயக்கர் நூலகம், திருவாளர் தி.க. இராசேசுவரன் நூலகம் என்பவையாம்! இவற்றொடும், அரங்கானரும் தாமும் இளந்தைப் பருவந் தொட்டே அரிதின் முயன்று தொகுத்த நூல்களும் இடம் பெற்றுத் தவத்திரு மறைமலையடிகளார் நூலகத்தை மணிமலை யாக்கி மாண்புறச் செய்கின்றன.
படங்கள், நூல்கள் தொகுப்பதுடன் புலவர்கள் அறிஞர்கள் கடிதங்களையும், கையெழுத்துக்களையும் இடையறவின்றித் தொகுத்துக் கொண்டே வருகின்றனர். எங்கும் காண்டற்கரிய வரலாற்றுச் சிறப்புடைய கடிதங்கள் திருவருள் துணையால் கழக அமைச்சர் திருவரங்கனார் காலந்தொட்டே தொகுத்துப் பேணி வைக்கப் பெற்றிருக்கின்றன. அவற்றால் தமிழ் வரலாற்றுலகும் இலக்கிய உலகும் பெருஞ்சிறப்பான பயன் கொள்ளுதல் ஒருதலை. அக் கடிதங்களை மட்டுமே ஆய்வுப் பொருளெனக் கொண்டு பண்டாரசர் பட்டம் பெறுதற்குத் தக்க கருவூலமாகக் திகழ்கின்றது. அக் கடிதங்களில் காணக்கிடைக்கும் அரிய குறிப்புக்களை எல்லாம் தனி நூலாக்கி வெளியிடின் ஆராய்ச்சி உலகம் பெரும்பயன் கொள்ளும்.
திருவரங்கனார் வரலாற்றுச் சிறப்புடைய கடிதங்களைத் தொகுக்கும் முயற்சியை மேற்கொள்ளாதிருந்திருப்பாரானால் அக்கடிதங்களைப் பேணிக் காத்தலும் அவ்வழியில் தொடர்ந்து செல்லுதலும் திருவாளர் வ. சு. அவர்கள் மேற்கொள்ளாது இருந்திருப்பாரானால், திருவாங்கூர் தீர்வைத்துறை ஆணையராகத் திரு.டி. பொன்னம்பலம் பிள்ளை இருந்தார் என்பதையோ அவர் தமிழ்மேல் தணியாப் பற்றாளராகவும், தேர்ச்சியாளராகவும் திகழ்ந்தார் என்பதையோ, தொல்காப்பிய உரைகள் அனைத்தையும் ஒரு கொத்தாக ஆங்கிலத்தில் பெயர்க்க விரும்பினார் என்பதையோ, தமிழ்நாட்டுக் குறுநில மன்னர்களும் பெருவள மடங்களும் நிலக்கிழார்களும் துணைபுரியமுன்பாராது வாளா விருந்தனர் என்பேையா, பரோடா மன்னர் அத் திருப்பணியை மேற்கொண்டு உதவ முன்வந்தார் என்பதையோ, இப் பணி உதவிக்குப் பரோடா அமைச்சர் வி.பி. மாதவராவ் துணை நின்றார் என்பதையோ நாம் அறிந்து கொள்ள வாய்ப்பு உண்டா? அவ்வாறே 1933 திசம்பர் 23, 24 ஆம் நாட்களில் சென்னைப் பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் தமிழன்பர் மாநாடு என்னும் பெயரல் வடமொழி ஆக்க மாநாடு ஒன்று நடந்தது என்றோ, அம் மாநாட்டின் அழைப்பிதழ் பெற்ற தனித்தமிழ்த்